‘ஜீப்’ ரேங்லர் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகமான டீசல் ஜீப் ரேங்கலரை தொடர்ந்து தற்போது அதன் பெட்ரோல் வேரியண்ட்டும் விற்பனைக்கு அறிமுகம். அது குறித்த தகவல்களை பார்ப்போம்.

Written by: Super Admin

1941ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதிப்புமிக்க அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான 'ஜீப்', தனது மூன்றாம் தலைமுறை 'ஜீப் ரேங்லர்' டீசல் வேரியண்ட் மூலமாக இந்திய சந்தையில் கடந்த ஆண்டு கால் பதித்தது. இந்நிலையில் தற்போது அதன் பெட்ரோல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்திய ஜீப் பிரியர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக வெளியாகியுள்ள பெட்ரோல் மாடலில் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 285 பிஹச்பி பவர் வெளிப்படுத்தக்கூடியது, 5 ஸ்பீடு ஆட்டொமேடிக் கியர் பாக்ஸ் கொண்டதாக வெளிவந்துள்ளது ரேங்லர்.

இதன் எஞ்சின் இலகுரக உதிரிபாகங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மற்றும் குளிரூட்டப்பட்ட எக்சாஸ்ட் கேஸ் ரீசர்குலேசன் ( EGR) என்ற புதிய அமைப்பு மூலமாக ஆஃப் ரோடிங் அனுபவத்தின் போது சிறந்த எரிபொருள் சேமிப்பையும் தரும் என்பது சிறப்பாகும்.

மேலும், ஆல் வீல் டிரைவ், பாதுகாப்பான டிரைவிங்குக்கான எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), சொகுசான பயணத்திற்காக கேஸ் அப்சார்பர்கள் கொண்ட உயர் ரக சஸ்பெண்ஷன், வாட்டர் வாஷ் செய்யக்கூடிய இண்டீரியர், ரீமூவபிள் கார்பெட்கள், லெதர் சீட்கள், ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல் ஏசி, தானியங்கி முகப்பு விளக்குகள்.

மலையேற்ற பயணத்திற்கான ஹில் அசிஸ்ட் உதவி (HSA), கீலெஸ் எண்ட்ரி மற்றும் கழற்றி மாற்றும் வசதியிலான கதவுகள் என மலைக்க வைக்கும் சிறப்பம்சங்கள் கொண்ட தாக வெளியாகியுள்ள ஜீப் ரேங்லர் பெட்ரோல் மாடல், கவர்ச்சிகரமான 6 வண்ணங்களில் கிடைக்கிறது.

கவர்ச்சிகரமான தோற்றத்துடன், திறன், செயல்பாடு மற்றும் சொகுசு அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஜீப் ரேங்லர் பெட்ரோல் மாடல் ரூ.56 லட்சம் (டெல்லி) எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, முன்னதாக வெளிவந்த டீசல் வேரியண்ட் ரூ.71.59 லட்சம் எக்ஸ் ஷோரும் விலையில் கிடைக்கிறது.

இதன் வகையில் ஜீப் ரேங்லர் மாடலுக்கு போட்டி இல்லாத நிலையில், விலையை பொறுத்து மெர்சிடஸ் ஜிஎல்சி மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய செக்மெண்ட்டில் ஜீப் ரேங்லர் பெட்ரோல் மாடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் எஞ்சின் கொண்ட மஹிந்திராவின் முதல் எஸ்யுவியான கேயுவி100 மாடல் காரின் படங்கள் :

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Wednesday, February 15, 2017, 10:34 [IST]
English summary
Jeep Wrangler Unlimited petrol launched in India. The engine produces more power, while the vehicle is priced below the diesel variant.
Please Wait while comments are loading...

Latest Photos