பயோ கேஸில் இயங்கும் பஸ்கள் கொல்கத்தாவில் அறிமுகமாகிறது!

Written By:

நாட்டிலேயே முதல்முறையாக பயோ கேஸில் இயங்கும் பஸ்கள் கொல்கத்தா நகரில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத இந்த பஸ்களுக்கான எரிபொருள் செலவு மிக மிக குறைவாக இருக்கும்.

எனவே, டிக்கெட் கட்டணமும் மிக குறைவாக நிர்ணயிக்கப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து செய்தியில் படிக்கலாம்.

வரும் மார்ச் மாதம் முதல் பயோ கேஸில் இயங்கும் பஸ்கள் கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக கொல்கத்தா மாநகரின்12 வழித்தடங்களில் 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கொல்கத்தாவிலுள்ள உல்ட்டாதங்கா மற்றும் கரியா ஆகிய பகுதிகளுக்கு இடையிலான 17 கிமீ தொலைவு கொண்ட வழித்தடத்தில் முதல் பஸ் அறிமுகம் செய்யபப்படும்.

பயோ கேஸில் இயங்கும் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது என்பது மட்டும் அல்ல. மிகுந்த எரிபொருள் சிக்கனத்தை தர வல்லவை. எனவே, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

ஒரு கிலோ பயோ கேஸில் இந்த பஸ்கள் 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும். ஒரு கிலோ பயோ கேஸ் ரூ.30க்கு விற்கபப்படுகிறது. நச்சுப் புகை இல்லாத நகர்ப்புற போக்குவரத்துக்கு இந்த பஸ்கள் வழிகோலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்சாதன வசதியில்லாத இந்த பஸ்களில் 60 பயணிகள் வரை செல்ல முடியும். ஒவ்வொரு பஸ்சும் ரூ.13 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

டெல்லியிலும் போய கேஸ் பஸ்களை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தது. ஆனால், அங்கு மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், இந்த திட்டம் கைவிடப்பட்டது.

வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசு படுவதை குறைக்கும் விதத்தில், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பயோ கேஸ் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புது மாருதி ஸ்விஃப்ட் வாங்க ஐடியா இருக்கா? கண்டிப்பா இந்த ஆல்பத்தை மிஸ் பண்ணாதீங்க!

கார், பைக்குகளின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோ கேலரி!

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Friday, January 6, 2017, 12:49 [IST]
English summary
Kolkata To Get India’s First Buses Running On Biogas.
Please Wait while comments are loading...

Latest Photos