லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!

லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் காரின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Written By:

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், அதன் திறந்து மூடும் கூரை வசதியுடன் கூடிய ஹூராகென் ஸ்பைடர் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை தொடர்ந்து காணலாம்.

புதிய லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலாக வந்துள்ளது. இந்த காரின் எஞ்சின் சக்தி பின்புற சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

இந்த காரில் இருக்கும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 572 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இதன் எஞ்சினின் 10 சிலிண்டர்களும் அபரிமித சக்தியையும், முறுக்குவிசையையும் வாரி வழங்கும். இதன்மூலமாக, 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமையை பெற்றுள்ளது. மணிக்கு 319 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்த காரின் எஞ்சின் இயக்கத்தை மூன்றுவிதமான நிலைகளில் மாற்றிக் கொள்வதற்கான வசதி உள்ளது. கார்ஸா மோடில் வைத்தால் அதிகபட்சமான செயல்திறனை பெற முடியும். ஸ்போர்ட் மற்றும் டேமஸ்ட் மோடுகளில் மிதமான செயல்திறனை வழங்கும்.

இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் திறந்து மூடும் கூரையை மின்னணு கட்டுப்பாட்டு முறையில் சுவிட்ச் மூலமாக கட்டுப்படுத்தலாம். வெறும் 17 வினாடிகளில் இந்த காரின் கூரையை திறந்து மூடலாம். மணிக்கு 50 கிமீ வேகத்திற்கும் குறைவாக கார் செல்லும்போதுதான் கூரையை திறக்கவும், மூடவும் முடியும்.

திறந்த கூரை அமைப்புடைய இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பாக கூடுதலாக ரோல் பார்கள், கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினிய கலவையிலான வலுவான சேஸீ போன்ற பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது.

ஆல் வீல் டிரைவ் ஹூராகென் ஸ்பைடர் மாடலை விட இந்த ரியர் வீல் டிரைவ் ஹூராகென் ஸ்பைடர் கார் 33 கிலோ வரை எடை குறைவானது. இந்த காரின் பம்பரில் மிகப்பெரிய ஏர் இன்டேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் காரில் 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் பைரெல்லோ பிஸீரோடயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரூ.3.45 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது வந்திருக்கும் ஸ்பைடர் மாடலுடன் சேர்த்து இந்தியாவில் ஹூராகென் கார் 5 மாடல்களில் கிடைக்கிறது.

ஃபெராரி கலிஃபோர்னியா டி, போர்ஷே 911 டர்போ எஸ் கேப்ரியோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடல் கார் போட்டியை தரும்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Lamborghini Huracan RWD Spyder launched in India.
Please Wait while comments are loading...

Latest Photos