உலகின் அதிவேக எஸ்யூவியாக வரும் லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி!

Written By:

சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் புதிய சூப்பர் எஸ்யூவியை தயாரித்து வருகிறது. உரஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கு காரணம், இதன் மிரட்டலான தோற்றமும், செயல்திறன் மிக்க எஞ்சினும்தான் என்று கூற முடியும். அத்துடன், இந்த எஸ்யூவியை உலகின் அதிவேக எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்யும் எண்ணத்தில் இந்த எஸ்யூவியில் ஹைபிரிட் சிஸ்டம் கொாடுக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்த சில முக்கிய விஷயங்களை ஆட்டோகார் இதழலுடன் லம்போர்கினி நிறுவனத்தின் கார் தயாரிப்பு மையத்தின் தலைமை அதிகாரி மருஷியோ ரெக்கியானி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இரண்டுவிதமான ஆற்றல் மையங்களின் துணையுடன் மிக சக்திவாய்ந்த எஸ்யூவி மாடலாக வருகிறது.

மேலும், அதிக டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கும் நோக்கில், டர்போசார்ஜர்களும் எஞ்சினுக்கு துணைபுரியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், மாதிரிக்காக தயாரிக்கப்பட்ட உரஸ் எஸ்யூவியிலிருந்து தற்போது தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான உரஸ் எஸ்யூவி வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு முதல் லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் வடிவமைப்பு மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஆடி க்யூ7, போர்ஷே கேயென் மற்றும் பென்ட்லீ பென்டைகா போன்ற உயர்வகை எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கார்பன் ஃபைபர் பாகங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இருப்பதால் எடை குறைவாக இருக்கும்.

இந்த 4 சீட்டர் எஸ்யூவி மாடலானது அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும். எனவே, இது அறிமுகம் செய்யப்படும் உலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமையை பெறும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டு பிற்பகுதியில் லம்போர்கினி உரஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவியை லம்போர்கினி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Lamborghini Urus is set to be the first vehicle in the Italian manufacturer's history.
Please Wait while comments are loading...

Latest Photos