லம்போர்கினி உரஸ் சூப்பர் எஸ்யூவி உற்பத்தி ஏப்ரலில் துவங்குகிறது!

Written By:

வித்தியாசமான வடிவமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின் என்று தனித்துவமான சூப்பர் கார்களை லம்போர்கினி தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் எஸ்யூவி மாடல் ஒன்றை உருவாக்கி உள்ளது.

உரஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி 2018ம் ஆண்டு உலக அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் இந்த எஸ்யூவியின் உற்பத்தியை துவங்க இருப்பதாக லம்போர்கினி தலைமை செயல் அதிகாரி ஸ்டெஃபானோ டோம்னிகலி தெரிவித்துள்ளார்.

முதலில் உற்பத்தி செய்யப்பட உள்ள சில மாடல்கள் புரோட்டோடைப் மாடல்களாக இருக்கும். இவை சாலை சோதனை ஓட்டங்கள் உள்பட பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது. தயாரிப்பு நிலை மாடலும் உரஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.

இந்த புதிய சூப்பர் எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், இது எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டு ஹைப்ரிட் வகை எஸ்யூவி மாடலாகவும் வர இருக்கிறது. இதனால், இந்த எஸ்யூவி அதிக டார்க் திறனை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும்.

உரஸ் எஸ்யூவியை உற்பத்தி செய்வதற்கான திறனை லம்போர்கினி பெற்றிருக்கிறது. மேலும், ஆண்டுக்கு தலா 3,500 ஹூராகென் மற்றும் அவென்டேடார் கார்களை மட்டுமே உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, ஆண்டுக்கு 3,500 உரஸ் எஸ்யூவிகளை தயாரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் ஆடி கார் நிறுவனத்தின் க்யூ7 எஸ்யூவி தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் பனிப்படர்ந்த சாலைகள், மோசமான மலைச்சாலைகள் மற்றும் மணல்பாங்கான பகுதிகளில் இயக்குவதற்கான பிரத்யேக தொழில்நுட்பங்களுடன் வருகை தருகிறது.

மொத்தத்தில் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் கவனத்தை இந்த எஸ்யூவி ஈர்த்துள்ள இந்த வேளையில், உற்பத்திக்கு செல்ல இருப்பதாக வெளியாகி உள்ள தகவல், அவர்களின் ஆவலை மேலும் தூண்டுவதாக அமைந்துள்ளது.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.

English summary
The Urus SUV will be based on the same platform as its Volkswagen siblings the Audi Q7 and Bentley Bentayga.
Please Wait while comments are loading...

Latest Photos