இந்தியாவில் அறிமுகமாகும் லெக்சஸ் கார்கள்... டொயோட்டாவின் சொகுசு கார் பிராண்டு!

இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய லெக்சஸ் சொகுசு கார்கள் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த மும்மூர்த்திகளாக கருதப்படும் ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சொகுசு கார்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்துள்ளது.

இதனை மனதில் கொண்டு தனது கீழ் செயல்படும் லெக்சஸ் பிராண்டு சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கார் மாடல்கள் மற்றும் அதன் எதிர்பார்க்கும் விலை உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

01. லெக்சஸ் இஎஸ் 300எச்

எதிர்பார்க்கும் விலை: ரூ.60 லட்சம்

லெக்சஸ் நிறுவனத்தின் பிரபலமான சொகுசு செடான் கார் மாடல் லெக்சஸ் இஎஸ்300எச். கடந்த 2012ம் ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 6-ஆம் தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது.

டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரில் இருக்கும் அதே 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவரையும், 213என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஜப்பானில் உள்ள ஆலையில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் சொகுசு காருடன் போட்டி போடும்.

லெக்சஸ் ஆர்எக்ஸ் 450எச்

எதிர்பார்க்கும் விலை: ரூ.1.20 கோடி

இது க்ராஸ்ஓவர் பாடி ஸ்டைல் கொண்ட சொகுசு கார் மாடல். கடந்த 2015ம் ஆண்டு நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 4-ஆம் தலைமுறை மாடலாக விற்பனையில் உள்ளது. முரட்டுத்தனமான பெரிய க்ரில் அமைப்பு, சாய்வான கூரை அமைப்பு, அலாய் வீல்கள் கவர்ச்சி தரும் விஷயங்கள். ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக இருக்கும் டொயோட்டா க்ளூகர் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் மாடல்.

இந்த க்ராஸ்ஓவர் காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 308 பிஎஸ் பவரை அளிக்க வல்லது இந்த எஞ்சின். கனடா நாட்டில் உள்ள அன்டாரியோ நகரில் உள்ள லெக்சஸ் ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்துதான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்6, போர்ஷே கேயென் மற்றும் வால்வோ எக்ஸ்சி90 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

லெக்சஸ் எல்எக்ஸ்450டீ

எதிர்பார்க்கும் விலை: ரூ.2.34 கோடி

லெக்சஸ் பிராண்டின் மிகவும் விரும்பப்படும் சொகுசு எஸ்யூவி வகை மாடல். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொகுசு கார் மாடல். இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் முதலில் டீசல் மாடலும், பின்னர் பெட்ரோல் மாடலும் களமிறக்கப்படும். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்றே ஆஃப்ரோடு தொழில்நுட்ப அம்சங்களையும், கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.

வெளிநாடுகளில் இந்த காரில் டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலையில் செல்லும்போது முன்னால், பின்னால் உள்ள வாகனங்களை ரேடார் உதவியுடன் கண்டறிந்து தானியங்கி முறையில் இதன் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் வேகத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளும். ஆனால், இந்த சிஸ்டம் இந்தியாவில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே. லேண்ட்ரோவர் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!

ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Lexus to launch 3 Luxury Car Models in India.
Please Wait while comments are loading...

Latest Photos