டொயோட்டா நிறுவனத்தின் புதிய லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடம்பர கார்களான லெக்ஸஸ் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது டொயோட்டா நிறுவனம்.அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் உலகம் முழுவதும் கார் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் தொழிற்கூட்டு வைத்து கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இன்னோவா, ஃபார்ச்சூனர், எடியாஸ், லிவா, கொரோலா ஆல்டிஸ், கேம்ரி ஹைபிரிட் போன்ற கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

டொயோட்டா நிறுவனம், விலை உயர்ந்த ஆடம்பர கார்களை 1989ஆம் ஆண்டு முதல் ‘லெக்ஸஸ்' என்ற பிராண்டின் கீழ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்நிலையில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் சந்தையில் ஆடம்பர கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை உணர்ந்த டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக லெக்ஸஸ் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

தற்போது இந்திய சந்தையில் முதல் முறையாக களம் கண்டுள்ள லெக்ஸஸ், ஆரம்பகட்டமாக 3 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 55 லட்ச ரூபாய் முதல் 2.3 கோடி ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

லெக்ஸஸ் ‘ஆர்எக்ஸ் 450ஹச்' என்ற ஹைபிரிட் எஸ்யுவி மாடலும், ‘ஈஎஸ் 300 ஹச்'என்ற செடன் மாடலும் ‘எல்எக்ஸ்450டி' என்ற ஆடம்பர எஸ்யூவி மாடலையும் ஆரம்பகட்டமாக டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

செடன் மாடலான லெக்ஸஸ் ‘ஈஎஸ் 300 ஹச்' கார் 5.27 லட்ச ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது. ‘ஆர்எக்ஸ் 450ஹச்' கார் 1.07 கோடி ரூபாய் விலையிலும், எல்எக்ஸ்450டி மாடல் 2.3 கோடி ரூபாய் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

எல்எக்ஸ்450டி

எல்எக்ஸ்450டி

லெக்ஸஸ் எல்எக்ஸ்450டி காரில் 4.5 லிட்டர் ட்வின் டர்போ, வி8 ஆயில் பர்னர் டீசல் எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 269 பிஹச்பி ஆற்றலையும், 650 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.

ஆர்எக்ஸ் 450ஹச்

ஆர்எக்ஸ் 450ஹச்

லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 450ஹச் காரில் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இவை எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைப்பு பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 308 பிஹச்பி ஆற்றலையும் 361 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இவை ரிவர்ஸ் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரவ் ஆஃப்ஷன்களில் கிடைக்கிறது.

ஈஎஸ் 300ஹச்

ஈஎஸ் 300ஹச்

லெக்ஸஸ் ஈஎஸ் 300ஹச் காரில் 2.5 லிட்டர் எஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 202 பிஹச்பி ஆற்றலையும், 213 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 10 ஏர் பேக்குகள் உள்ளன. மேலும் டைனமிக் ராடார், ஸ்டீரிங் அஸிஸ்ட், ஆட்டோமேடிக் ஹைபீம் ஆகிய தொழில்நுட்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

லெக்ஸஸ் கார்களில் எண்ணற்ற சிறப்பம்சங்கள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

12.3 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்

உள்ளிழுக்கும் வகையிலான சன் ரூஃப்

பின்புற எண்டெர்டெயின்மெண்ட் சிஸ்டம் (ஆப்ஷனல்)

டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல்

ஆட்டோமேடிக் ஹை பீம்

ப்ரீ கொலிஷன் சிஸ்டம் (கேமரா, ரேடாருடன் கூடிய மோதல் எச்சரிக்கை அமைப்பு)

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

ஆடம்பர கார்கள் பிரிவில் இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, வால்வோ நிறுவனங்களின் கார்களுக்கு லெக்ஸஸ் கார்கள் போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளன.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

லெக்ஸஸ் கார்களுக்கான பிரத்யேக ஷோரூம்களை இந்தியாவில் முதற்கட்டமாக 4 இடங்களில் அமைக்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் மும்பை, பெங்களூரு நகரங்களில் தலா ஒன்றும், டெல்லியில் இரண்டும் அமைக்கப்படலாம் என தெரிகிறது.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

லெக்ஸஸ் கார்களுக்கான புக்கிங்குகளை டொயோட்டா நிறுவனம் பெறத்துவங்கியுள்ளது. நாளை முதல் இந்த கார்களின் டெலிவரி துவங்கும் என கூறப்படுகிறது.

டொயோட்டா லெக்ஸஸ் ஆடம்பர கார்கள் இந்தியாவில் அறிமுகம்

லெக்ஸஸ் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாததால் வெளிநாடுகளில் இருந்து முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. ஆதலால் இதன் விலை மற்ற நிறுவனங்களின் மாடல்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கலாம். மேலும் கூடிய விரைவிலேயே ‘எல்எஸ்500 ஹச்' என்ற காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது டொயோட்டா நிறுவனம்.

Most Read Articles
English summary
Lexus is all set to enter the Indian market today. The range topping LX 450d will be priced at Rs 2.3 crore.
Story first published: Friday, March 24, 2017, 18:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X