‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ஐரோப்பாவில் அறிமுகம்.!!

Written By:

இந்தியர்கள் பெருமை கொள்ளும் விதமாக 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஜீப் காம்பாஸ் எஸ்யூவிக்கள் ஐரோப்பாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஜீப் நிறுவனம், இந்தியாவில் மேட் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் அதன் எஸ்யூவி கார்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன்படி தயாரிக்கப்பட்ட ஜீப காம்பாஸ் எஸ்யூவிக்களை தற்போது அந்நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவிக்கள், இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் இஞ்சின் மாடல்களில், ஸ்போர்ட், லாங்கிடியூட், லிமிடட் மற்றும் டிரையல்ஹாக் என 4 வேரியண்ட்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வடிவமைப்பு அமெரிக்காவின் எஸ்ஆர்71 பிளாக்பேர்டு போர் விமானத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஜீப் எஸ்யூவிகளுக்கே உரித்தான க்ரில் அமைப்பு, நேர்த்தியான க்ரில் அமைப்பு, வலிமையான வீல் ஆர்ச்சுகள், கவர்ச்சியான டெயில் லைட் க்ளஸ்ட்டர் போன்றவை இந்த எஸ்யூவியின் தோற்றத்தை மிக கவர்ச்சியாக காட்டுகின்றன. அதேநேரத்தில், ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் பல டிசைன் தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

காம்பாஸ் எஸ்யூவியின் இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கிறது. கவர்ச்சியான டேஷ்போர்டு, யு-கனெக்ட் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பிரிமியம் லெதர் இருக்கைகள் என மிக அசத்தலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவியின் பெட்ரோல் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜூடு இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 138 பிஹச்பி ஆற்றலையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

இதேபோல காம்பாஸ் எஸ்யூவியின் டீசல் மாடலில் 2.0 லிட்டர் மல்டி ஜெட் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 168 பிஹச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகும்.

புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 50 பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

இந்த புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவீக்கள் மகராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ள ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் கிரைஸ்லர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவிக்களுக்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இதன் விலை ரூ. 18 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, June 13, 2017, 16:31 [IST]
English summary
Read in Tamil about jeep launches made in india compass jeep in europe market.
Please Wait while comments are loading...

Latest Photos