மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் புதிதாக 7 வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

1945ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தியாவின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. 2011ல் வெளியிடப்பட்ட ஃபார்ச்சூன் 500 இந்திய நிறுவனங்களின் பட்டியலில் 21வது இடத்தை பெற்ற நிறுவனமாகும். ஸ்கார்ப்பியோ, பொலிரோ, எக்ஸ்யூவி500 போன்ற சிறந்த எஸ்யூவி ரக கார்களை தந்த இந்நிறுவனம் தற்போது புதிதாக 7 வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் ‘சுப்ரோ' பிராண்டின் கீழ், சரக்கு வாகனங்கள் பிரிவில் 3 வாகனங்களும், பயணிகள் பிரிவில் 4 வாகனங்களும் புதிதாக அறிமுகம் ஆகியுள்ளன.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

புதிதாக அறிமுகமாகியுள்ள மஹிந்திரா மினி வேன் ரூ. 4.71 லட்சம் ( கொல்கத்தா எக்ஸ் ஷோரூம்) விலையிலும், சுப்ரோ மேக்சி ட்ரக் ரூ. 4.28 லட்சம் ( கொல்கத்தா எக்ஸ் ஷோரூம்) என்ற விலையிலும் கிடைக்கும். இரண்டு மாடல்களும் 909 சிசி டீசல் எஞ்சினுடன் வருகின்றது.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

மஹிந்திரா மினி வேன் விஎக்ஸ், சிஎன்ஜி மற்றும் பள்ளி வேன் என்ற 3 வேரியண்டுகளில் கிடைக்கின்றது. மேக்சி மற்றும் மினி வேன் ஆகிய இரண்டுமே பாரத் ஸ்டேஜ் - 4 மாசு உமிழ்வு தர சான்றிதழ் பெற்றவையாகும்.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

சுப்ரோவின் கீழ் உள்ள மாடல்கள் அனைத்துமே செயல்திறன், வலிமை, பாதுகாப்பு, நம்பகத்தன்மை உள்ளிட்ட பிரிவுகளில் கடுமையான பரிசோதனைகளை கண்டுள்ளது. இவை மகராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகின்றன.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

மக்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சுப்ரோ பிராண்டு வாகனங்கள் மூலம் மஹிந்திரா நிறுவனத்தின் நன்மதிப்பு உயரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத் தலைவர் பிரவின் ஷா.

மஹிந்திரா சுப்ரோ பிராண்டின் கீழ் 7 புதிய வாகனங்கள் அறிமுகம்

புதிதாக அறிமுகமாகியுள்ள வாகனங்களுக்கு 2 ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ (முதலில் வருவது) வாரண்டி தரப்படுகிறது. சுப்ரோ மேக்சி ட்ரக் முதலில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது, அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் ஈ-சுப்ரோ வேன் மற்றும் ஈ-கார்கோ வேன் என்ற அதன் இரண்டு எலெக்ட்ரிக் வேரியண்டுகள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள காம்பாக்ட் எஸ்யூவி 'கேப்டூர்' காரின் படங்கள்:

Most Read Articles
English summary
Indian auto major Mahindra & Mahindra has launched seven new vehicles under its Supro brand with three models in the cargo segment and four models in the passenger van segment.
Story first published: Saturday, February 18, 2017, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X