ஆட்டோவிற்கு மாற்றாக அமையுமா மின்சார ரிக்‌ஷாக்கள்: மஹிந்திராவின் புது அதிரடி பிளான்..!!

Written By:

இந்தியாவில் மின்சார வாகன தயாரிப்பை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளது மஹிந்திரா நிறுவனம்.

உலக நாடுகளிலுள்ள பல கார் நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் அதிக திறன் கொண்ட மின்சார காரை தயாரிக்க மஹிந்திரா பின்னின்ஃபெரினா உடன் கைக்கோர்த்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மஹிந்திரா நிறுவனம் ரூ.600 கோடியை முதலீடு செய்கிறது. இதன்மூலம் ரூ.1200 கோடிக்கான வர்த்தகம் உருவாக்கப்படும் என மஹிந்திராவின் தலைமை அதிகாரி
பவன் கோயென்கா தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனம் 48 வோல்ட் மற்றும் 72 வோல்ட் திறன்களில் கார்களை தயாரித்து வருகிறது.

இவற்றுடன் 360 முதல் 600 வோல்ட் திறன் கொண்ட புதிய மின்சார ஆற்றலை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மின்சார ஆற்றல் பினின்ஃபெர்னா முத்திரை உடன் கொண்ட ஆடம்பர காரிலும் பொருத்தப்படும் என பவன் கோயென்கா கூறுகிறார்.

இந்த சூப்பர் ஆற்றல் பெற்ற காரில் மட்டுமில்லாமல், சிறிய ரக மின்சார பேருந்துகள் மற்றும் அதிக திறன் பெற்ற மற்ற மாடல் வாகனங்களிலும் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் 2018ல் அந்நிறுவனம் மின்சார பேருந்துகளை வெளியிடுகிறது. அதே ஆண்டின் இறுதிக்குள் மின்சார ரிக்ஷாக்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

மஹிந்திரா தயாரிக்கவுள்ள மின்சார பேருந்துகள் 9 மீட்டர் நீளம் கொண்டவையாக இருக்கும் என்று தலைமை அதிகாரி பவன் கோயென்கா தெரிவிக்கிறார்.

இந்தியாவில் மஹிந்திரா தயாரிக்கும் அனைத்து மின்சார வாகனங்களும் பூனாவின் சக்கன் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாராகும் என்று தெரிகிறது.

மின்சார வாகனத்திற்கான சந்தை இந்தியாவில் வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதில் மஹிந்திராவிற்கு இணையாக டாடாவும் அதிரடியாக மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra and Mahindra will introduce an electric bus in 2018 and e-rickshaws by the end of this year. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos