மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் ஆனிவர்சரி எடிசன் அறிமுகம்- விலை விபரம்!

Written By:

நம் நாட்டு கார் மார்க்கெட்டில் விலை குறைவான மினி எஸ்யூவி மாடலாக மஹிந்திரா கேயூவி100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டில், இதுவரை 42,000 கேயூவி100 மினி எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கேயூவி100 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டு முடிவடைந்ததை கொண்டாடும் விதத்தில், ஆனிவர்சரி எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த மாடல் குறித்த முழுமையான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா கேயூவி100 காரின் கே8 என்ற டாப் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டு இந்த சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த சிறப்பு பதிப்பு மாடல் ஃப்ளாம்பாயன்ட் ரெட் மற்றும் டேஸ்லிங் சில்வர் என்ற இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இரண்டிலுமே கருப்பு வண்ணக் கூரை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பாடி ஒரு வண்ணத்திலும், கூரை கருப்பு வண்ணத்திலும் இருக்கிறது.

கேயூவி100 ஆனிவர்சரி எடிசனில் கருப்பு வண்ண இன்டீரியர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. காரை அலங்கரித்துக் கொள்ளவும் கூடுதல் வசதிகளை சேர்த்துக் கொள்வதற்காக 4 விதமான ஆக்சஸெரீ பேக்குகளும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், கே6 மற்றும் கே+ வேரியண்ட்டுகளுக்கு புதிய 14 அங்குல அலாய் வீல்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

மஹிந்திரா கேயூவி100 ஆனிவர்சரி எடிசன் மாடலின் கே8 வேரியண்ட்டிற்கு ரூ.6.37 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கே8 வேரியண்ட்டைவிட ரூ.13,000 கூடுதல் விலையில் இந்த புதிய ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மஹிந்திரா டீலர்களிலும் இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

English summary
Mahindra & Mahindra has launched the Anniversary Edition of its smallest utility vehicle, the KUV 100 as the vehicle celebrated its first anniversary in India.
Please Wait while comments are loading...

Latest Photos