மஹிந்திரா கேயூவி100 ஆனிவர்சரி எடிசன் அறிமுகம்- தகவல்கள்!

விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவுபெறுவதையொட்டி, மஹிந்திரா கேயூவி100 காரின் ஆனிவர்சரி எடிசன் மாடல் பார்வைக்கு அறிமுகமாகியுள்ளது.

Written By:

மிக குறைவான விலை எஸ்யூவி மாடலாக மஹிந்திரா கேயூவி100 கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அடக்கமான வடிவம், வசதிகள், 6 பேர் செல்வதற்கான இருக்கை வசதி மற்றும் மிக குறைவான விலை போன்றவை இந்த எஸ்யூவிக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய கேயூவி100 ஆனிவர்சரி எடிசன் மாடல் மும்பையில் நடந்து வரும் ஆட்டோகார் இந்தியா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா கேயூவி 100 ஆனிவர்சரி எடிசன் மாடல் இரட்டை வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கூரை மற்றும் பாடி வெவ்வேறு வண்ணங்களில் கவர்ச்சியாக இருக்கிறது. ஃப்ளாம்பாயன்ட் ரெட் மற்றும் டாஸ்லிங் சில்வர் என்ற இரண்டு வண்ணக் கலவையில் இந்த புதிய ஆனிவர்சரி எடிசன் கிடைக்கும்.

புதிய மஹிந்திரா கேயூவி 100 ஆனிவர்சரி எடிசன் மாடலில் எக்ஸ்ப்ளோரர் கிட் விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம். இந்த எஸ்யூவி வகை காரில் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் ஜி80 பெட்ரோல் எஞ்சினஅ மற்றும் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் டி75 டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கூரை, ஏ பில்லர் மற்றும் சி பில்லர்களில் பளபளப்பு மிகுந்த மெட்டாலிக் கருப்பு வண்ண பெயிண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆனிவர்சரி எடிசனின் கே8 வேரியண்ட்டில் புதிய டிசைனிலான 15 இன்ச் அலாய் வீல்களும் உண்டு. கே6 மற்றும் கே6 ப்ளஸ் வேரியண்ட்டுகளில் 14 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதையடுத்து, மஹிந்திரா கேயூவி 100 காருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை போக்கிக் கொள்ளும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஆனிவர்சரி எடிசன் மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. விரைவில் விலை விபரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல், படங்கள்: ஆட்டோகார் இந்தியா

புதிய மஹிந்திரா கேயூவி100 எஸ்யூயிவின் பிரத்யேக படங்கள்!

புதிய மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் பார்க்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mahindra has showcased the Anniversary Edition of its compact crossover , the KUV100 at an event in Mumbai. The new model will be launched in the Indian market in the near future.
Please Wait while comments are loading...

Latest Photos