மேனுவல் VS ஆட்டோமோடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்: நன்மைகள் மற்றும் குறைபாடுகள்..!

Written By:

ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களின் ஆதிக்கம் தற்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்களில் எதற்கு அதிக வரவேற்பு உள்ளது, எது அதிக நன்மை தருகிறது என்பது குறித்தும், இரண்டிற்கும் உள்ள சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ்

முதலில் புதிய வரவான ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ்ஸில் உள்ள சாதக பாதகங்களை காணலாம்.

பயன்படுத்த எளிதானது

முந்தைய தலைமுறை தொழில்நுட்பம் என்று கருதப்படும் மேனுவல் கியர்பாக்ஸை விட பயன்படுத்துவதற்கு மிக எளிதானது என்பதே ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸின் முதல் சாதகமான அம்சமாகும்.

குறைந்த மனித ஆற்றல்

புதிதாக கார் ஓட்டுபவர்கள் பலருக்கும் ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவர்களை ஒருசேர இயக்குவதில் சிரமம் இருக்கும். ஆட்டோமேடிக் கியர்பாக்ஸை பயன்படுத்த குறைந்த அளவே மனித ஆற்றல் தேவைப்படுவதால்
பலருக்கும் விருப்பமாக இருப்பது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தான்.

மலைச் சாலையில் சிறந்தது

அனுபவம் இல்லாத டிரைவர்களுக்கு மலைச் சாலைகளில் கார் ஓட்டுவது மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. ஆனால் இந்த வகை கியர் பாக்ஸ்கள் அந்த சிரமத்தை வெகுவாக குறைத்து எளிதான மலைச்சாலை டிரைவிங்கை அனைவருக்கும் சாத்தியப்படுத்துகிறது.

அடிக்கடி இஞ்சின் நிறுத்தப்படுவது தவிர்ப்பு

புதிய கார் ஓட்டுநர்களுக்கு இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை நிறுத்தப்பட்டிருக்கும் காரைஆன் செய்து நகர்த்தும் போது இஞ்சின் ஆஃப் ஆகிவிடுவது. சரியான முறையில் கிளட்ச், ஆக்ஸிலரேட்டர் ஆகியவற்றை இயக்க தவறுகையில் ஏற்படும் இந்த பிரச்சனையை ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சரிசெய்துவிடுகிறது.

போக்குவரத்து நெரிசலில் பயன்படுத்த எளிது

போக்குவரத்து நெரிசல்களில் அடிக்கடி கியர் மாற்றுவதும், ஆக்ஸிலரேட்டர் பயன்படுத்துவதும் எரிச்சலை உண்டாக்கும். ஆட்டோமேடிக் கியர்பாக்ஸில் அந்த பிரச்சனையே எழுவதில்லை. ஆக்ஸிலரேட்டர் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

விலை அதிகம்

ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்களின் சாதகங்களை பார்த்து வந்தோம், ஆனால் இதன் முக்கிய பாதக அம்சமே இதன் விலை தான். மேனுவல் தொழில்நுட்பத்தை காட்டிலும் இதன் விலை சற்றே கூடுதலாக இருக்கிறது.

மேனுவல் கியர் பாக்ஸ்

புதிய தொழில்நுட்பமான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கார் சந்தையை ஆக்கிரமித்திருந்தாலும், கார் விரும்பிகள் பலரும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே சிறந்ததே என்று அடித்து கூறுவர். அதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்களை இங்கு காணலாம்.

விலை குறைவு

பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்கள் விலை குறைவான மேனுவல் கியர் பாக்ஸ் கார்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனோடு போட்டி போடமுடியாத அளவு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கார்களில் விலை கூடுதலாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

பராமரிக்க எளிது

பல நுண் உதிரிபாகங்கள் இருப்பதால் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸில் பிரச்சனை ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆகும் செலது கூடுதலாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸில் பிரச்சனை ஏற்பட்டால் அது உங்கள் பட்ஜெட்டுக்கு எப்போதும் உலை வைப்பதில்லை.

சிறந்த மைலேஜ்

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் ஆற்றல் விரயம் குறைவாக இருக்கும் என்பதால் 5% முதல் 15% வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஆட்டோமேட்டிக் கார்கள் குறைவான மைலேஜ்தான் தரும்.

சிறந்த கட்டுப்பாடு

டிரைவிங்கின் போது தேவைக்கேற்ப ஆற்றலை பயன்படுத்த முடியும் என்பதால் கார்களை மேனுவல் கியரால் சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடிகிறது.

ஆட்டோமேடிக் கியர்பாக்ஸின் சிறப்புகள்

ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பயன்படுத்த எளிதாகவும், வசதியாகவும் உள்ளது. எரிபொருள் சிக்கனம் கிடையாது.

மேனுவல் கியர்பாக்ஸின் சிறப்புகள்

மேனுவல் கியர்பாக்ஸ்களில் அதிக மனித ஆற்றல் இருப்பது ஓட்டுநருக்கு பாதுகாப்பான அம்சம், குறைந்த விலை கொண்டதாகவும் உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு, அதிக எரிபொருள் சிக்கனம் இருப்பது உள்ளிட்டவை இதனை முன்னிலை படுத்துகின்றன.

முடிவு

இரண்டிலுமே அதிக சாதகங்களும், சிறிய அளவிலான பாதகங்களும் உள்ளது. என்றாலும் இது வாங்குபவரின் வசதி மற்றும் தேவையை பொருத்தது என்பதால். இரண்டுமே ஒவ்வொரு வகையில் சிறந்தது என்று தான் கூறமுடியும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Manual vs automatic gearbox: advantages and disadvantages in tamil description.
Please Wait while comments are loading...

Latest Photos