மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் இமாலய வெற்றிக்கான காரணங்கள்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் வெற்றிக்கான காரணங்கள் சிலவற்றை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

இந்திய கார் சந்தை வரலாற்றில் மிக அதிக முன்பதிவுகளை குவித்த மாடல்களில் ஒன்றாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் மாறி இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு முடிவதற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை குவித்து அசத்தி உள்ளது.

மாதத்திற்கு சராசரியாக 7,000 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாவதுடன், இதுவரை 85,000 மாருதி பிரெஸ்ஸா கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செக்மென்ட்டில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மீதான ஈர்ப்பையும் மீறி, மாருதி பிரெஸ்ஸா மிகப்பெரிய வெற்றியையும், எல்லோரையும் வாங்கத் தூண்டுவதற்கான காரணங்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிம்மதி

மொபைல்போன் வாங்கினால் பேட்டரி சூடாகிறது, கார் வாங்கினால் எஞ்சின் பிரச்னை எழுகிறது என்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் மிக நம்பகமான பிராண்டாக மாருதி இருப்பதே ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை தாண்டி பிரெஸ்ஸாவை பலர் விரும்புவதற்கு முதல் காரணம். அதாவது, நிம்மதி.

சர்வீஸ் பில்

காரை வாங்கி ஓர் ஆண்டு முடிவதற்குள், சர்வீஸ் பில் வந்துவிட்டதே என்ற கவலை இல்லாத அளவுக்கு மாருதியின் விற்பனைக்கு பிந்தைய சேவைகள் இருக்கின்றன. குறிப்பாக, நெக்ஸா பிராண்டில் இல்லாமல், மாருதி தனது சாதாரண டீலர்ஷிப்புகள் வழியாக பிரெஸ்ஸாவை களமிறக்கியதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. மாருதி என்றாலே பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் என்ற வாடிக்கையாளர்களின் நம்பிக்கை.

சவாலான விலை

விலை நிர்ணயிப்பதில் மாருதி கில்லி. மாருதி பிரெஸ்ஸா காரின் விலையையும் மிக சவாலாக நிர்ணயித்தது. இதே ரகத்திலான மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியைவிட மாருதி பிரெஸ்ஸா கார் ரூ.20,000 வரையிலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரைவிட ரூ.40,000 வரை குறைவு. வேறு எதை பற்றியும் யோசிக்காமல் மாருதி பிரெஸ்ஸாவை வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக் கொண்டு தேர்வு செய்வதற்கு இதுவும் காரணம்.

மதிப்புமிக்க மாடல்

மற்றொரு காரணம், மாருதி பிரெஸ்ஸா காரின் பேஸ் மாடலில் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நிரந்தர பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பேஸ் மாடலிலும் ஏர்பேக் உண்டு. ஆனால், விலையை ஒப்பிடுகையில், மதிப்பு மிக்க மாடல் மாருதி பிரெஸ்ஸா என்றாகிவிடுகிறது.

நம்பகமான எஞ்சின்

இந்தியாவில் பல கார் மாடல்களில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் மாருதி பிரெஸ்ஸா காரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவின் மிகவும் நம்பகமான எஞ்சின்களில் ஒன்று இந்த எஞ்சின். இந்த எஞ்சின் 88.5 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லதாக இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

மைலேஜ்

இந்த கார் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதாவது, எஸ்யூவி ரகத்தில் மிகச் சிறப்பான மைலேஜ் என்பதுடன், ஸ்விஃப்ட் காரில் இருக்கும் இதே எஞ்சின் மிகச் சிறப்பான மைலேஜ் வழங்குவதும் இதன் மீதான நம்பகத்தன்மையை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது.

கஸ்டமைஸ் ஆப்ஷன்

மாருதி பிரெஸ்ஸா காரை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம்போல் அலங்கரித்துக் கொள்வதற்கான ஐ-கிரியேட் என்ற பிரத்யேக வசதியையும் மாருதி அறிமுகம் செய்தது. மேலும், இரட்டை வண்ணக் கலவையுடன், இந்த கூடுதல் அலங்காரமும் வாடிக்கையாளர்கள் தங்களது பிரெஸ்ஸாவை தனித்துவத்துடன் அலங்கரித்துக் கொள்ள வழி வகுத்துள்ளது.

வசதிகள்

மாருதி பிரெஸ்ஸா காரின் டாப் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி போன்றவையும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான தேர்வாக்கியுள்ளது.

சர்வீஸ் மையங்கள்

பெரு நகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் வரை மாருதி சர்வீஸ் மையங்கள் வியாபித்துள்ளன. நாடுமுழுவதும் 3,000க்கும் அதிகமான சர்வீஸ் மையங்களை மாருதி பெற்றிருக்கிறது. அதாவது, போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், 5 முதல் 10 மடங்கு கூடுதலான சர்வீஸ் மையங்களை மாருதி பெற்றிருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் மிக நெருக்கமான, தரமான சர்வீஸ் சேவையை பெற முடிகிறது.

இந்தியாவின் சிறந்த கார் விருது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, டாடா டியாகோ போன்ற கார்களின் போட்டியை தாண்டி 2017ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கார் விருதை மாருதி பிரெஸ்ஸா கார் பெற்றிருக்கிறது. அனைத்து விதத்திலும் சீர்தூக்கி பார்த்து இந்த விருதை ஆட்டோமொபைல் துறையில் அனுபவம் வாய்ந்த நடுவர் குழு அளித்துள்ளது. இதுவும் இப்போது மாருதி பிரெஸ்ஸாவுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விஷயமாகி உள்ளது.

மதிப்பும், நிம்மதியும்...

கார் வாங்கினால் மதிப்புடன், நிம்மதியாக பயணிக்க வேண்டும். அதனை மாருதி பிரெஸ்ஸா தருவதாக வாடிக்கையாளர்கள் நம்புவதை, அதன் புக்கிங் எண்ணிக்கை மூலமாக அறிய முடிகிறது.

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவியின் படங்கள்!

டொயோட்டா சிஎச்-ஆர் எஸ்யூவி இந்தியா வருகிறது என்ற தகவலை கேட்டவுடன், அதனை முழுமையாக பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறதல்லவா? அதனை தீர்ப்பதற்காக 35 படங்கள் அடங்கிய கேலரியை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Secret Behind Maruti Brezza Success.
Please Wait while comments are loading...

Latest Photos