புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் - முழு விபரம்!

Written By:

வடிவமைப்பு, வசதிகளில் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய மாருதி டிசையர் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் விலை உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மாருதி டிசையர் கார் 'HEARTTECT' என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இலகு எடை கொண்டதாகவும், அதிக உறுதிமிக்க கட்டமைப்புடன் வந்துள்ளது. இதனால், பழைய மாடலைவிட 105 கிலோ வரை எடை குறைந்துள்ளது. வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் உட்புறத்தில் இடவசதி மேம்பட்டுள்ளது.

புதிய மாருதி டிசையர் காரின் முகப்பு, பக்கவாட்டு டிசைன் மற்றும் பின்புற டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், பழைய காரிலிருந்து அதிக வேறுபாடு கொண்ட மாடலாக மாறி இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் போன்ற பல சிறப்புகளை பெற்றிருக்கிறது. 15 இன்ச் டைமன் கட் அலாய் வீல்களும் வெளிப்புற டிசைனுக்கு கவர்ச்சி சேர்க்கிறது.

உட்புறத்தில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இது ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் போன்றவை மிக முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

புதிய மாருதி டிசையர் காரில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் இடம்பெற்றிருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பேஸ் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.40 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. புதிய மாருதி டிசையர் காரின் டீசல் மாடல்தான் இப்போது இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. பின்புற இருக்கைகளில் ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட்டை பொருத்தும் பாதுகாப்பு வசதியும் இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரில் 376 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. புதிய மாருதி டிசையர் கார் ஆக்ஸ்ஃபோர்டு புளூ, கேலண்ட் ரெட், ஷெர்வுட் பிரவுன் ஆகிய மூன்று புதிய வண்ணங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடலின் விலை விபரங்களை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
எல்எக்ஸ்ஐ ரூ.5.45 லட்சம்
விஎக்ஸ்ஐ ரூ.6.29 லட்சம்
விஎக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் ரூ.6.76 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ரூ.7.05 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் ரூ.7.52 லட்சம்
இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ரூ.7.94 லட்சம்
இசட்எக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.8.41 லட்சம்

புதிய மாருதி டிசையர் காரின் டீசல் மாடலின் விலை விபரங்களை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை[டெல்லி]
எல்டிஐ ரூ.6.45 லட்சம்
விடிஐ ரூ.7.29 லட்சம்
விடிஐ ஆட்டோமேட்டிக் ரூ.7.76 லட்சம்
இசட்டிஐ ரூ.8.05 லட்சம்
இசட்டிஐ ஆட்டோமேட்டிக் ரூ.8.52 லட்சம்
இசட்டிஐ ப்ளஸ் ரூ.8.94 லட்சம்
இசட்டிஐ ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ரூ.9.41 லட்சம்

Story first published: Tuesday, May 16, 2017, 13:29 [IST]
English summary
Maruti Dzire launched in India. The new Dzire is based on the all-new Swift but drops the Swift name.
Please Wait while comments are loading...

Latest Photos