விற்பனையில் ஸ்விஃப்ட் காரை பின்னுக்கு தள்ளி மாருதி பலினோ புதிய சாதனை!

மாருதிசுசுகியின் ஸ்விஃப்ட் காரின் விற்பனையை முறியடித்து பலினோ புதிய சாதனை படைத்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

இந்திய கார் சந்தையில் கோலோய்ச்சி வரும் மாருதிசுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இந்திய கார் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு முக்கிய கார் ஆகும். மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக விளங்கி வரும் ஸ்விப்ட் காரை தற்போது முதல்முறையாக பலினோ கார் பின்னுக்கு தள்ளியுள்ளது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

மாருதிசுசுகியின் பலினோ, பிரிமியம் காம்பாக்ட் ஹேட்ச்பேக் கார் ஆகும். தற்போது எந்தவொரு பிரிமியம் காம்பாக்ட் ஹேட்ச்பேக் காரின் விற்பனையையும் விட அதிக அளவிலான பலினோ கார்கள் கடந்த மார்ச் மாதம் விற்பனையாகி புதிய உச்சத்தை பெற்றுள்ளது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

கடந்த மார்ச் மாதம் 16,426 பலினோ கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி நிறுவனம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,236 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் தற்போது 163.40 சதவீத வளர்ச்சியை பலினோ பெற்றுள்ளது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

விற்பனையில் தனது உடன்பிறப்புகளான ஸ்விஃப்ட், டிசைர் மற்றும் வேகன் ஆர் மாடல்களை முதல்முறையாக முந்தியுள்ள பலினோ, கடந்த மார்ச்சில் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

2015ஆம் ஆண்டு அக்டோபர் 24ல் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது பலினோ கார். அறிமுகம் முதலே மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன பலினோ கார்கள். இக்காரை புதிய டிசைன் பரிலானைகளுடன் உருவாக்கியுள்ளது மாருதிசுசுகி.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

அதிகமான ஆர்டர்கள் குவிந்து வருவதால் பலினோ கார்கள், 6 மாத காத்திருப்பு காலத்திற்கு பின்னர் தான் டெலிவரி கிடைக்கின்றன. கிடைத்த ஆர்டர்களையே பூர்த்தி செய்யாமல் திணறி வருகிறது அந்நிறுவனம்.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

குஜராத்தில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை துவங்கிய பின்னர் அதிகமான பலினோ கார்களை உற்பத்தி செய்து வருகிறது மாருதி நிறுவனம். ஆயினும் இன்னமும் 80,000 கார்களுக்கான ஆர்டர்கள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. தற்போதைய காத்திருப்பு காலமும் 20-21 வாரங்களாக உள்ளது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

இந்நிலையில், சமீபத்தில் அதன் பவர்ஃபுல் வேரியண்டான பலினோ ஆர்எஸ் காரை அறிமுகப்படுத்தியது மாருதி. பலினோ கார்களை மாருதியின் பிரத்யேக நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமே எஸ்-கிராஸ், இக்னிஸ் மற்றும் சியாஸ் செடன் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

மாருதி பலினோ பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் வேரியண்டில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 83 பிஹச்பி ஆற்றலையும் 115 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றல் இதன் பின்சக்கரங்களுக்கு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மூலம் செலுத்தப்படுகிறது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

இதேபோல 1.3 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 74 பிஹச்பி ஆற்றலையும் 190 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றல் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் பின்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

மாருதி ஸ்விப்ஃட் காரின் விற்பனையை முந்தியது பலினோ!

சமீபத்திய அறிமுகமான பலினோ ஆர்எஸ் வேரியண்டில் 1.0 லிட்டர் பூஸ்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 100.5 பிஹச்பி ஆற்றலையும், 150 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

இவை 7.05 லட்ச ரூபாய் முதல் 8.69 லட்ச ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. (டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை)

Most Read Articles
English summary
Read in Tamil about Baleno crosses swift in sales. and know more about price, mileage, specs and more
Story first published: Friday, April 7, 2017, 15:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X