பவர்ஃபுல் மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ரெடி... நீங்க ரெடியா?

சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலாக களமிறங்க இருக்கும் புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் அறிமுக தேதி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

Written By:

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ கார் நம்பர்-1 மாடலாக விளங்கி வருகிறது. ஆணழகன் ஹூண்டாய் எலைட் ஐ20 காரையே விற்பனையில் சாய்த்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் சக்திவாய்ந்த ஆர்எஸ் என்ற புதிய மாடலை மாருதி களமிறக்க உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த கார் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் 3ந் தேதி இந்த புதிய காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த மாருதி கார் நிறுவனம் நாள் குறித்துள்ளது.

சாதாரண பலேனோ காரைவிட பல கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்டது இந்த மாடல். முன்புற பம்பர் மற்றும் பின்புற பம்பர்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. க்ரோம் பூச்சுடன் கூடிய கம்பி வலை க்ரில் அமைப்பு வித்தியாசப்படுத்துகிறது. கருப்பு வண்ண அலாய் வீல்கள், ஆர்எஸ் பேட்ஜ் போன்றவையும் சாதாரண மாடலிலிருந்து ஆர்எஸ் மாடலை வேறுபடுத்துகின்றன.

மாருதி பலேனோ காரின் மிக முக்கிய அம்சம், இதில் பொருத்தப்பட்டு இருக்கும் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின்தான். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 5 ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் போன்றே இதுவும் மிக சக்திவாய்ந்த எஞ்சினாக இருக்கிறது.

மாருதி பலேனோ ஆர்எஸ் கார் 3,995மிமீ நீளமும், 1,745மிமீ அகலமும், 1,510மிமீ உயரமும் கொண்டது. 2,520மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 37 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட வழக்கமான சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கும்.

புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியண்ட் ரூ.12 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ மற்றும் ஃபியட் புன்ட்டோ அபார்த் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

விரைவில் இந்தியா வரும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki Baleno RS is expected to come with a price tag of around Rs 8 lakh to Rs 9 lakh.
Please Wait while comments are loading...

Latest Photos