மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் பெங்களூரில் துவங்குகிறது!

Written By:

இந்தியாவின் மிக சவாலான ராலி பந்தயங்களில் ஒன்றாக மாருதி தக்ஷின் டேர் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு 9-வது மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்திற்கான துவக்க நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை பெங்களூரில் நடக்கிறது.

பெங்களூர், ராஜாஜி நகரில் உள்ள ஓரியான் மால் வணிக வளாகத்தில் இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதைத்தொடர்ந்து, வரும் 17ந் தேதி காலை ராலி பந்தயம் துவங்குகிறது.

பெங்களூரில் துவங்கும் இந்த ராலி பந்தயம் மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நிறைவடையும். பெங்களூரில் இருந்து சித்ரதுர்கா, பெல்காம், கோல்ஹாப்பூர் வழியாக புனே நகரில் சென்றடைய வேண்டும்.

இந்த போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பல்வேறு சவால் மிகுந்த நிலப்பரப்புகளை கடந்து செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக 2,200 கிமீ தூரத்தை வீரர்கள் தங்களது வாகனத்தில் கடக்க வேண்டி இருக்கும்.

இந்த போட்டியில் சவால்களை கடந்து வரும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. வரும் 22ந் தேதி புனே நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ராலி பந்தயத்தில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த ராலி பந்தயத்தின் எக்ஸ்க்ளூசிவ் கவரேஜை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் வழங்க இருக்கிறோம்.

கடந்த ஆண்டு நடந்த மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரை பயன்படுத்திய சுரேஷ் ராணா வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

English summary
2017 Maruti Suzuki Dakshin Dare to begin from Bengaluru on 16th July.
Story first published: Friday, July 14, 2017, 13:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos