மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்: நான்காம் நாளில் முன்னிலை பெற்றவர் விபரம்!

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. போட்டியின் நான்காம் நாளான நேற்றைய தினம் முன்னிலை பெற்றவர்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மழைக்கு இடையில் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் சென்று கொண்டிருக்கிறது. நேற்று நான்காவது நாள் முடிவுகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் இதுவரை தென் இந்தியாவில் நடந்து வந்த நிலையில், முதல்முறையாக நேற்று மஹாராஷ்டிர மாநிலத்திலும் தடம் பதித்தது. பந்தயத்தின் நான்காம் நாளான நேற்று மழை காரணமாக போட்டியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

கோல்ஹாப்பூரில் முடிவடைந்த இந்த ராலி பந்தயம் இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதிச் சுற்று சூப்பர் ஸ்பெஷல் ஸ்டேஜ் என்ற சவாலான வழித்தடத்தை போட்டியாளர்கள் கடந்தனர். மேலும், இந்த பந்தயம் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதால் போட்டியாளர்கள் மிகுந்த முனைப்புடன் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றனர்.

Recommended Video

2017 Mercedes New GLA India Launch In Tamil - DriveSpark தமிழ்
அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

நேற்று நான்காவது நாளில் 329 கிமீ தூரத்திற்கு போட்டி நடந்தது. அல்டிமேட் கார்ஸ் மற்றும் அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் மூன்றாவது நாளில் முன்னிலை பெற்றிருந்தவர்களே, நேற்றைய தினமும் முன்னிலை பெற்றனர்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

டீம் மாருதி சுஸுகி அணியை சேர்ந்த சுரேஷ் ராணா மற்றும் கோ டிரைவர் அஷ்வின் நாயக் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். பந்தய தூரத்தை இவர்கள் இணை 7 மணி 21 நிமிடங்கள் 13 வினாடிகளில் கடந்தனர்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

மாருதி ஜிப்ஸி எஸ்யூவியை பயன்படுத்தும் சாம்ராட் யாதவ் மற்றும் கோ டிரைவர் எஸ்என் நிஸாமி இணை 7 மணி 21 நிமிடங்கள் 51 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்தனர். சந்தீப் ஷர்மா மற்றும் கோ டிரைவர் கரண் ஆர்யா இணை 7 மணி 37 நிமிடங்கள் 27 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் ஆர்.நட்ராஜ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று 329 கிமீ தூரத்தை அவர் 4 மணி 49 நிமிடங்கள் 25 வினாடிகளில் கடந்தார். இதுகுறித்து நட்ராஜ் கூறுகையில்," மழை காரணமாக சேறு, சகதி நிறைந்த பாதைகள் சவாலாக இருந்தது.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

மழை காரணமாக டெஸ்ட் டிராக்கில் சகதியும், தண்ணீரும் தேங்கியதால் ஓட்டுவதற்கு சவாலாக இருந்தது. ஆனால், உள்ளூர் பார்வையாளர்களின் கண்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமைந்திருக்கும்," என்று நம்பலாம்.

அடாத மழையிலும் விடாது நடக்கும் மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம்!

இன்றைய தினம் கடைசி கட்ட போட்டி புனே நகரில் நிறைவடைய உள்ளது. இதுகுறித்த தகவல்களை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Most Read Articles
English summary
In its fourth leg, the 2017 edition of the Dakshin Dare rally entered Maharashtra for the first time. The rally, in all its previous editions stuck to the southern part of India, which is why it was named Dakshin Dare in the first place, Dakshin meaning South.
Story first published: Friday, July 21, 2017, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X