மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் நேற்று டெல்லியில் துவங்கியிருக்கிறது. ஆறு நாட்களுக்கு இந்த பந்தயம் நடக்கிறது.

By Saravana Rajan

மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் டெல்லியில் நேற்று துவங்கியது. ஆறு நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த பந்தயத்தில், போட்டியாளர்கள் 2,000 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

டெல்லியில் துவங்கியிருக்கும் இந்த பந்தயமானது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப் பகுதிகளை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹனுமன்கர், பிகானேர், ஜெய்சால்மர் வழியாக ஜோத்பூரில் இந்த பந்தயம் முடிவடைய உள்ளது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

வரும் 4ந் தேதி இந்த ராலி பந்தயத்தில் வெற்றி பெற்ற மோட்டார் பந்தய வீரர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இந்த ராலி பந்தயமானது எக்ஸ்ட்ரீம், என்டியூர், எக்ஸ்பப்ளோர் மற்றும் மோட்டோ ஆகிய 4 பிரிவுகளில் நடக்கிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

இந்த பந்தயத்தில் மாருதி அணி சார்பில் சுரேஷ் ரானா களம் கண்டுள்ளார். மோட்டோ பிரிவில் சி.எஸ்.சந்தோஷ் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்த பந்தயத்தில் பனி யாதவ், சாரா காஷ்யப் உள்ளிட்ட 10 முன்னணி மோட்டார் பந்தய வீராங்கனைகளும் பங்கு கொண்டுள்ளனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

மினி டக்கார் என்று வர்ணிக்கப்படும் இந்த பந்தயத்தில் மிக கடுமையான சீதோஷ்ண நிலை மற்றும் நிலப்பரப்புகளை போட்டியாளர்கள் கடந்து வர வேண்டும். மேலும், இந்தியாவின் மிக நீண்ட தூர ஸ்டேஜ் கொண்ட மோட்டார் பந்தயமாகவும் மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி கருதப்படுகிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் துவங்கியது!

இந்த மோட்டார் ராலி பந்தயத்தை எக்ஸான்மொபில் லூப்ரிகென்ட்ஸ் நிறுவனத்துடன் மாருதி சுஸுகி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்கள்!

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

Most Read Articles
English summary
The 15th edition of the Maruti Suzuki Desert Storm has been flagged off from Delhi and the competitors will cover a distance of 2,000km in next six days.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X