மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம்: இரண்டாவது ஸ்டேஜில் முன்னிலை வீரர்கள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தின் இரண்டாவது ஸ்டேஜ் முடிவில் முன்னிலை பெற்ற வீரர்கள் மற்றும் அணியினர் பற்றிய தகவல்களை இங்கே படிக்கலாம்.

Written By:

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது ஸ்டேஜ் முடிவில் முன்னிலை பெற்ற அணிகள், வீரர்கள் பற்றிய விபரங்களை காணலாம்.

இரண்டாவது ஸ்டேஜ் போட்டி பிகானேர் நகரிலிருந்து நூர்சார், கேலன், ராஜாசர், மோடிகர் மற்றும் நோக்ரா வழியாக ஜெய்சால்மர் வரை 500 கிமீ தூரத்திற்கு நடந்தது. கடும் வெப்பம் நிலவிய பாலைவனப் பகுதியில் போட்டியாளர்கள் தங்களது வாகனங்களை விரட்டிக் கொண்டு முன்னிலை பெற முயன்றனர்.

கடும் சவாலான இந்த இரண்டாவது ஸ்டேஜ் முடிவில் எக்ஸ்ட்ரீம் பிரிவில் தற்போதைய சாம்பியன் சஞ்சய் அகர்வால், சிவபிரகாஷ் இணை முன்னிலை பெற்றது. அடுத்து மாருதி அணியை சேர்ந்த ஹர்ப்ரீத் பவா மற்றும் வீரேந்திர காஷ்யப் இணை இரண்டாவது இடத்தை பிடித்தது.

டீம் மாருதி சுஸுகி அணியின் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் மூன்றாவது இடத்தை பெற்றனர். மோட்டோ பிரிவில் ஹீரோ மோட்டோஸ்போர்ட் அணியின் சி.எஸ்.சந்தோஷ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். நட்ராஜ் இரண்டாவது இடத்திலும், சஞ்சய்குமார் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மூன்றாவது ஸ்டேஜ் போட்டி 350 கிமீ தூரத்திற்கு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

 

 

மாருதி சுஸுகி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயத்தை மாருதி சுஸுகி மோட்டோர்ஸ்போர்ட்ஸ் அமைப்பு மொபில் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது. போட்டியில் பங்கேற்றிருக்கும் வாகனங்களுக்கான எரிபொருள், ஆயில் ஆகியவற்றை மொபில் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The leg 2 of the 2017 Maruti Suzuki Desert Storm has concluded. Sanjay Agarwal and CS Santosh lead the Extreme and Moto category respectively.
Please Wait while comments are loading...

Latest Photos