மாருதி இக்னிஸ் காரின் வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தன!

Written By:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாருதி இக்னிஸ் கார் ஜனவரி 13ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய மாருதி காரின் வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. அந்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

மாருதி இக்னிஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க வ்ல 1.3 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.89 கிமீ மைலேஜும், டீசல் மாடல் லிட்டருக்கு 26.80 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய மாருதி இக்னிஸ் கார் 3,700மிமீ நீளமும், 1,690மிமீ அகலமும், 1,595மிமீ உயரமும் கொண்டதாக வருகிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,435மிமீ. க்ராஸ்ஓவர் ரக மாடலாக வரும் மாருதி இக்னிஸ் கார் 180மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது.

 

பெட்ரோல் மாடல் 825 முதல் 860 கிலோ எடை கொண்டதாக இருக்கும். டீசல் மாடல் 940 முதல் 960 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த காரில் 260 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூமும், 36 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கும் இருக்கும்.

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா பிரிமியம் ஷோரூம்கள் வழியாக இந்த புதிய கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. பெட்ரோல், டீசல் என இரு மாடல்களும் சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 4 விதமான வேரியண்ட்டுகளில் வருகிறது. மிட் வேரியண்ட்டுகளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

சிக்மா[பெட்ரோல்]

குறைவான வசதிகள் கொண்ட சிக்மா பேஸ் வேரியண்ட்டில் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரட்டை ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. சிக்மா வேரியண்ட்டில் பாடி கலர் கைப்பிடிகள், பமம்பர், டில்ட் ஸ்டீயரிங், முன்புற பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

டெல்டா [பெட்ரோல், டீசல்]

சிக்மா வேரிண்ட்டில் இடம்பெற்றிருக்கும் வசதிகளுடன் கூடுதலாக இரட்டை வண்ண டேஷ்போர்டு, டாக்கோமீட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆடியோ சிஸ்டம், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, முழுவதுமான பவர் விண்டோஸ், மடக்கி வைக்க ஏதுவான பின் இருக்கை உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.

ஸீட்டா [பெட்ரோல், டீசல்]

மேற்கண்ட வேரியண்ட்டுகளில் வசதிகளுடன் கூடுதலாக பின்புறத்தில் டீஃபாகர், க்ரோம் அலங்கார க்ரில் அமைப்பு, பனி விளக்குகள், அலாய் வீல்கள், 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

வண்ணங்கள்

புதிய மாருதி இக்னிஸ் கார் பியர்ல் ஆர்டிக் ஒயிட், சில்க்கி சில்வர், கிளிஸ்டனிங் க்ரே, அர்பன் புளூ, டின்செல் புளூ மற்றும் அப்டவுன்ட் ரெட் ஆகிய 6 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

 

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மாருதி இக்னிஸ் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா கேயூவி100 மினி எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

English summary
Maruti Suzuki Ignis Brochure Leaked Ahead Of Launch — Details Revealed
Story first published: Tuesday, January 3, 2017, 10:03 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos