2017 ஸ்விப்ட் டிசையர் கார் மீது குவியும் புகார்கள்; துரித நடவடிக்கையில் மாருதி சுசுகி..!!

Written By:

மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட மாருதி டிசையர் இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்காக அறிமுகமானது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த புதிய மாடலில் சில குறைபாடுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் மத்தியில் புகார் எழுந்து வந்தன.

இதனை தீவிர பிரச்சனையாக எடுத்துக்கொண்டு குறைப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருதாக மாருதி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டீம் பி.எச்.பி என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், 2017 டிசையர் காரில் ஸ்டீயரிங் அசெம்பிளியை மாருதி சுசுகி மாற்றும் ஐடியாவில் உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வரை 2017 மாருதி டிசையர் கார்களை விற்கவேண்டும் என மாருதி சுசுகி டீலர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் டீம் பி.எச்.பி இணையதளம் கூறியுள்ளது.

ஆனால் ஸ்டீயரிங் அசெம்பிளியால் அனைத்து கார்களும் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது சில கார்களிடம் தான் இந்த பிரச்சனை உள்ளதா என்பதை மாருதி சுசுகி தெரிவிக்கவில்லை. 

ஆனால் ஸ்டீயரிங் அசெம்பிளி மாற்றியமைக்கப்பட்ட புதிய கார்களை ஷோரூம்களுக்கு மாருதி சுசுகி அனுப்பிவைத்து வருகிறது.

மேலும் பிரச்சனைக்குரிய மாடல்கள் ஷிப்பிங் செய்யப்படுவதற்கு முன்னதாக 2017 ஸ்விப்ட் டிசையர் கார்களில் உள்ள ஸ்டீயரிங் பிரச்சனை சரி செய்யும் பணி தற்போது மாருதி சுசுகிக்கான அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

3வது தலைமுறையாக வெளியிடப்பட்டுள்ள 2017 மாருதி டிசையர் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் 4 சிலிண்டர் ஆயில் பர்னர் கொண்ட எஞ்சின் என இரண்டு மாடல்கள் உள்ளன.

இந்த இரண்டு மாடல்களிலுமே 5- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது தேவையை கருதி ஏ.எம்.டி கியர்பாக்ஸ் உள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னதாகவே 2017 மாருதி டிசையர் கார்களை மாருதி சுசுகி அறிமுகம் செய்துவைத்து விட்டது.

ஆனால் தொடர்ந்து எழும் புகார்களால் அதை சரிய செய்ய அந்நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது.

இதுபோன்ற ஒரு பிரச்சனை இனி வாரமல் தடுக்க மாருதி சுசுகி தயாரிப்பு பணிகளில் அதீத கவனம் செலுத்த வேண்டும். 

English summary
Maruti Suzuki Reportedly Fixing An Issue In The New Dzire. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos