மாருதி டிசையர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி டிசையர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி டிசையர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி டிசையர் லிமிடேட் எடிசன் மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி டிசையர் அல்யூர் என்ற பெயரில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் இந்த புதிய லிமிடேட் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி டிசையர் ஆல்யூர் எடிசனில் பிரத்யேக பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் நான்கு முனைகளிலும் பம்பர் புரொடெக்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஆல்யூர் என்ற லிமிடேட் எடிசன் பேட்ஜ் பின்புறத்தில் பதிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பூட் ரூம் மூடிக்கு கீழ் பகுதியில் விசேஷ க்ரோம் பட்டையும் அலங்காரத்தை கூட்டுகிறது.

உட்புறத்தில் பீஜ் மற்றும் பழுப்பு என இரட்டை வண்ணக் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, பழுப்பு வண்ண சீட் கவர்கள் மிக பிரிமியமாக இருக்கின்றன. ஆல்யூர் எடிசன் பெயர் பொறிக்கப்பட்ட தலையணைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த காரின் டேஷ்போர்டு, கதவுகளில் ஃபாக்ஸ் வுட் மரத் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் கவர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.டிசையர் பேட்ஜ் பொறிக்கப்பட்ட பிரத்யேகமான சில் பிளேட்டுகளும் இந்த லிமிடேட் எடிசன் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆல்யூர் பெயர் பொறிக்கப்பட்ட மிதியடிகளும் இந்த காருடன் வழங்கப்படுகின்றன. வெள்ளை வண்ணத்தில் ஒளிரும் ஆம்பியன்ட் லைட் செட்டிங் இந்த காருக்கு தரப்பட்டுள்ளது.

இந்த லிமிடேட் எடிசன் மாடலுக்கான மியூசிக் சிஸ்டத்திற்கு கூடுதலான ஸ்பீக்கர்கள், ஆம்பிளிபயர்கள் அடங்கிய நெர்ட்ஸ் நிறுவனத்தின் மியூசிக் சிஸ்டம் கிட் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. வழக்கமான மாடலில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள் விபரம் வெளியிடப்பட்டு விட்டாலும், விலை விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விலை அறிவிப்பு வெளியாகும்.

புதிய நிஸான் மைக்ரா காரின் படங்கள்!

புதிய நிஸான் மைக்ரா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Suzuki has launched the limited edition Swift Dzire Allure in the Indian market with new exterior and interior accessories.
Please Wait while comments are loading...

Latest Photos