மாருதி பிரெஸ்ஸா மாடலுக்கு தொடர்ந்து குவியும் புக்கிங்!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியின், காம்பாக்ட் எஸ்யுவி விட்டாரா பிரெஸ்ஸா மாடல், இது இந்திய அளவில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பான புக்கிங் இருப்பதால் காத்திருப்பு காலம் தொடர்ந்து மாதக்கணக்கில் நீடிக்கிறது.
இதனால் குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய இயலாமல் மாருதி நிறுவனம் திணறி வருகிறது.

கடந்த மார்ச் 2016ல் அறிமுகமான பிரெஸ்ஸாவுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது, இதன் காரணமாக அறிமுகமான குறுகிய காலகட்டத்திற்குள்ளாக, அதாவது ஜனவரி 2017 வரை 90,000 கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி நிறுவனம்.

மாதம் ஒன்றிற்கு 9,000 முதல் 10,000 கார்கள் வரை பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகிவருகிறது, அறிமுகமான வெகு விரைவிலேயே 1 லட்சம் கார்கள் விற்பனையான எஸ்யூவி மாடல் என்ற அரிய சிறப்பை பெற இருக்கிறது மாருதி பிரெஸ்ஸா.

எனினும், பிரெஸ்ஸா மாடல்களை பொருத்த வரையில் இன்னமும் 45,000 எண்ணிக்கையிலான கார்கள் புக்கிங் பெறப்பட்டு டெலிவரி செய்யப்படாமல் உள்ளன, இதற்கான காத்திருக்கும் காலமானது, வேரியண்டை பொருத்து 6 முதல் 7 மாதங்களாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் குஜராத்தில் தொடங்கப்பட்ட மாருதியின் புதிய உற்பத்தி தொழிற்சாலைக்கு பலினோ காரின் உற்பத்தி மாற்றப்பட்டுள்ளதால், பிரெஸ்ஸாவிற்கான டெலிவரி காலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதம் ஒன்றிற்கு 9,000 முதல் 10,000 வரையிலான பிரெஸ்ஸா கார்களும், 12,000 முதல் 14,000 வரையில் பலினோ கார்களையும் தற்போது உற்பத்தி செய்து வருகிறது மாருதி.

மாருதி பிரெஸ்ஸா, எல்டிஐ, விடிஐ, விடிஐ+, இசட்டிஐ, இசட்டிஐ+ என 5 வேரியண்டுகளில் கிடைக்கிறது. மேலும் பிரெஸ்ஸா டீசல் மாடலாக மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டாரா பிரெஸ்ஸாவில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.3 லிட்டர் டிடிஐஎஸ்200 டீசல் எஞ்சின் உள்ளது, இது 88.50 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. ரூ. 7.26 லட்சம் முதல் ரூ.9.92 லட்சம் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) விலையில் பிரெஸ்ஸா கிடைக்கிறது.

டாடா ஹெக்ஸா மாடல் காரின் படங்கள்:

English summary
Maruti Brezza has 45,000 pending bookings as of January 2017 with a waiting period of 6 to 7 months depending on the variants.
Please Wait while comments are loading...

Latest Photos