மாருதி பிரெஸ்ஸா காரின் கஸ்டமைஸ் மாடல்: கல்யாணி மோட்டார்ஸ் அறிமுகம்!

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரின் கஸ்மடைஸ் மாடலை பெங்களூரை சேர்ந்த கல்யாணி மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

Written By:

கார்களை கூடுதல் அழகுடன் அல்லது வித்தியாசமான முறையில் மாற்றங்களை செய்து தருவதில் ஏராளமான கஸ்டமைஸ் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், பெங்களூரில் உள்ள மாருதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான கல்யாணி மோட்டார்ஸ் நிறுவனம் அவ்வப்போது புதிய மாருதி கார் மாடல்களை கஸ்டமைஸ் செய்து வெளியிட்டு வருகிறது.

தற்போது மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் கல்யாணியின் கைவண்ணத்தில் அழகை கூட்டிக் கொண்டுள்ளது. இந்த புதிய கஸ்டமைஸ் மாடல் கார் பிரியர்களை கவரும் என நம்பலாம். இந்த காரில் செய்யப்பட்டு இருக்கும் மாறுதல்கள், கட்டண விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி பிரெஸ்ஸா காருக்கு ஐ-கிரியேட் என்ற பெயரில் ஏற்கனவே கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சற்று கூடுதல் சிரத்தையுடன் இந்த மாருதி பிரெஸ்ஸாவை கஸ்டமைஸ் செய்து வெளியிட்டு இருக்கிறது கல்யாணி மோட்டார்ஸ்.

வெள்ளை வண்ண விட்டாரா பிரெஸ்ஸாவில் ஐ-கிரியேட் கஸ்டமைஸ் ஆக்சஸெரீகள் மற்றும் வெளியில் இருந்து பெறப்பட்ட அழகு சாதனங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது பிரெஸ்ஸா கார். கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் மாடல் விடிஐ வேரியண்ட் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரெஸ்ஸா கார் வெள்ளை- கருப்பு வண்ணக் கலவையில் காட்சி தருகிறது. முன்புற ஏர்டேம், க்ரில் அமைப்பு, ஹெட்லைட் ஆகியவை கறுப்பு வண்ணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

சைடு மிரர்கள், பில்லர்கள், கூரை, பின்புற ஸ்பாய்லர், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் கருப்பு நிறத்துடன் வேறுபடுத்தப்பட்டுள்ளது. கருப்பு- வெள்ளை வண்ண டைமன்ட் கட் அலாய் வீல்களும் கவர்ச்சி சேர்க்கின்றன.

முன்புற பானட்டில் பிரெஸ்ஸா பிராண்டு பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் சுஸுகி என்ற பிராண்டு பெயர் டெயில் கேட்டில் பெரிய அளவில் பதிக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய ஃபாக்ஸ் லெதர் சீட் கவர்கள் கவர்கிறது. டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் அலங்கார பேனல்கள் பதிக்கப்பட்டுளளன.

ஸ்டீயரிங் வீல், ஆர்ம் ரெஸ்ட்டுகளில் லெதர் உறை போடப்பட்டுள்ளது. மேலும், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா காரின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா விடிஐ மாடல் ரூ.9,80,338 ஆன்ரோடு விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், சிறப்பு அலங்காரத்துக்காக ரூ.2.40 லட்சம் கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Maruti Vitara Brezza Custom Model by Kalyani Motors.
Please Wait while comments are loading...

Latest Photos