லேண்ட் ரோவர் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை அதிரடி விலை குறைப்பு..!

Written By:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான லேண்ட் ரோவர் கார்களுக்கு இந்தியாவில் 4 லட்ச ரூபாய் வரை அதிரடி விலை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கார்களின் விலையை போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வரும் நிலையில், ஆச்சசியம் அளிக்கத்தக்க வகையில் இதற்கு நேர்மாறாக லேண்ட்ரோவர் நிறுவனம் அதிரடி விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் கார்களை இந்தியாவில் டாடா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

லேண்ட் ரோவர் நிறுவனம் கீழ்கண்ட மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

  • டிஸ்கவரி 
  • ரேஞ்ச் ரோவர் எவோக், 
  • டிஸ்கவரி ஸ்போர்ட், 
  • ஃபிரீலேண்டர்2, 
  • ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் 
  • டிஸ்கவரி4

இந்நிலையில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் எவோக் மாடல்களுக்கு மட்டும் தற்போது விலை குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 43.8 லட்ச ரூபாய் முதல் 53.34 லட்ச ரூபாய் விலை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு 4 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 53.05 லட்ச ரூபாய் முதல் 61.4 லட்ச ரூபாய் விலை கொண்ட ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கு அதிரடியாக 3 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 53.05 லட்ச ரூபாய் முதல் 61.4 லட்ச ரூபாய் விலை கொண்ட ரேஞ்ச் ரோவர் எவோக் காருக்கு அதிரடியாக 3 லட்ச ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களை தவிர்த்து மற்ற மாடல்கள் வெளிநாடுகளில் இருந்து முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அவற்றிற்கு விலை குறைப்பு செய்யப்படவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Read in Tamil about Land Rover announces cost cut upto 4 lakhs in india for its SUVs
Please Wait while comments are loading...

Latest Photos