மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா தரும் தகவல்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பிரத்யேகமாக வழங்குகிறோம்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குறைவான விலையிலான சொகுசு எஸ்யூவி ரக கார் ஜிஎல்ஏ. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டது.

கடந்த ஜனவரியில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் தற்போது இந்தியாவிலும் தடம் பதிக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார் ஜிஎல்ஏ 200 ஸ்போர்ட், ஜிஎல்ஏ 200 டீ ஸ்டைல், ஜிஎல்ஏ 200 டீ ஸ்போர்ட் மற்றும் ஜிஎல்ஏ 220 டீ 4 மேட்டிக் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 2.1 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் இரண்டு விதமான திறன் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

200 டீ என்ற மாடல்கள் அதிகபட்சமாக 134 பிஎச்பி சக்தியையும், 220டீ மாடல்கள் 168 பிஎச்பி சக்தியையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். டீசல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 205 கிமீ வேகம் வரை செல்லும். 4 மேட்டிக் டாப் வேரியண்ட் மணிக்கு 218 கிமீ வேகம் வரை செல்லும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎச்பி சக்தியையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை 7.6 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் 4,417மிமீ நீளமும், 1,804மிமீ அகலமும், 1,494மிமீ உயரமும் கொண்டது. இந்த கார் 2,699 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தரை இடைவெளி 30 மிமீ அதிகரிக்கப்பட்டிருப்பதால், இப்போது கிரவுண்ட் கிளியரன்ஸ் 210மிமீ என்ற அளவில் உயர்ந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் பை- ஸினான் ஹெட்லைட்டுகளுக்கு பதிலாக இப்போது முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. க்ரோம் க்ரில் அமைப்பும், அதன் நடுவில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவும் வசீகரிக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

பக்கவாட்டில் முன்பைவிட தரை இடைவெளி அதிகரிக்கப்பட்டு இருப்பதால், எஸ்யூவி ரகத்திற்கு உரிய கம்பீரத்தை பெற்றிருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் 18 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் முக்கிய மாற்றமாக கூறலாம். அதேபோன்று, பின்புற பம்பர் அமைப்பிலும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

உட்புறத்தில் சில கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் 8 திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டச்டர், புதிய டயல்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெடல்கள், ஆம்பியன்ட் லைட்டுகள், 12 விதமான வண்ணங்கள், பனோரமிக் சன்ரூஃப் போன்ற பல சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர வந்துள்ளது புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி கார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவில்லை. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், அடாப்டிவ் பிரேக்கிங், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆக்சிலரேசன் ஸ்கிட் கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஓட்டுனர் அயர்ந்து போவதை உணர்ந்து எச்சரிக்கும் அட்டென்ஷன் அசிஸ்ட் வசதியும் உள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ஜிஎல்ஏ 200 ஸ்போர்ட்[பெட்ரோல்] : ரூ.32.20 லட்சம்

ஜிஎல்ஏ 200டீ ஸ்டைல்: ரூ.30.65 லட்சம்

ஜிஎல்ஏ 200 டீ ஸ்போர்ட்: ரூ.33.85 லட்சம்

ஜிஎல்ஏ 220 டீ 4 மேட்டிக்: ரூ.36.75 லட்சம்

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின்னர் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரின் விலை ரூ.4 லட்சம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
2017 Mercedes-Benz GLA Launched In India; Prices Start At Rs 30.65 Lakh.
Story first published: Wednesday, July 5, 2017, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X