இந்தியாவில் ஏறுமுகத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ்

கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவில் மட்டும் 3,650 எண்ணிக்கையிலான பென்ஸ் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம், நம் நாட்டில் பென்ஸ் காரின் விற்பனை திறன் ஒரு சதவீதமாக உயர்ந்துள்ளது.

Written By:

உலகில் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் சென்ற காலாண்டுக்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. 2017 ஜனவரி முதல் மார்ச் வரையில் இந்தியாவில் மட்டும் அந்நிறுவனம் கிட்டத்தட்ட 3,650 கார்களை விற்றுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஈ கிளாஸ் செடான் மாடல் கார்கள் இந்தியாவில் அதிக விற்பனை ஆகியுள்ளன. இந்த விவரங்களின் படி, பென்ஸ் கடந்தாண்டை விட 2017ல் ஒரு சதவீத அளவிலான விற்பனை வளர்ச்சியை கூடுதலாக இந்தியாவில் பெற்றுள்ளது.

இந்தாண்டிற்கான முதல் காலாண்டிலேயே நல்ல விற்பனை திறனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறியுள்ளது. வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டதன் மூலமே இத்தகைய வளர்ச்சியை இந்தாண்டின் தொடக்கத்திலேயே அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மெர்சிடிஸ்- பென்ஸ் நிறுவனத்தில் ஆடம்பர எஸ்.யூ.வி கார்களின் விற்பனை இந்தியாவில் 13 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் GLA, GLC, GLE, GLE கூப் என அனைத்து GLS ரக எஸ்.யூ.விக்கள் நாட்டில் வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை ஈட்டியுள்ளது.

கார்களின் எண்ணிக்கைகளை விட, பென்ஸ் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் ஈட்டிய வருமானங்களை வைத்தும் அதன் வளர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி, பென்ஸ் நிறுவனம் விற்பனை சதவீதத்தலான வளர்ச்சியை எட்ட அந்நிறுவனத்தின் எஸ்.யூ.வி கார்களும் மிகப்பெரிய காரணம்.

இந்தியாவில் மெர்சிடிஸின் GLE, GLE கூப், GLS போன்ற எஸ்.யூ.வி மாடல்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த கார்களாக பார்க்கப்படுகின்றன.

 

அதேபோல ஆடம்பர வசதிகளை வழங்கும் சி-கிளாஸ், ஈ-கிளாஸ் மற்றும் எஸ்-கிளாஸ் போன்றவை மெர்சிடிஸ் நிறுவனத்தின் கணிப்புப்படி இந்தியாவில் நல்ல வியாபார விகத்தத்தை எட்டியுள்ளன. குறிப்பாக ஈ-கிளாஸ் செடான் மாடல் கார்கள் கடந்த மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்று விற்பனை ஆகியுள்ளன.

இதுமட்டுமில்லாமல், மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய தலைமுறை வாகனங்களும் இந்த காலண்டின் கணக்கு பட்டியலில் அந்நிறுவனத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டிதந்துள்ளன.

இந்த வளர்ச்சியை குறித்து கருத்து தெரிவித்த இந்தியா மெர்சிடிஸ் நிறுவனத்திற்கான நிர்வாக அதிகாரி ரோலண்ட் ஃபால்ஜர், 2017ம் ஆண்டின் தொடக்கமே நல்ல நேர்மறையாக அமைந்துள்ளதாகவும், தொடர்ந்து வரக்கூடிய காலாண்டுகளிலும் இது தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களின் நன்மை கருதி மெர்சிடிஸ் நிறுவனத்தின் செயல்முறைகள் அனைத்தும் பெரியளவிலான வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைக்க தாங்கள் முயற்சிப்போம் எனவும் இந்தியாவிற்கான மெர்சிடிஸ் நிர்வாக அதிகாரி ரோலண்ட் ஃபால்ஜர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஈ-கிளாஸ் மாடலுக்கு அதிகரித்துள்ள வரவேற்பு நிர்வாக அதிகாரி ரோலண்ட் ஃபால்ஜருக்கே பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மேலும் ஈ-கிளாஸ் வடிவமைப்பில் புதியதாக லாங் வீல் பேஸ் மாடல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதை 2017ன் முதல் காலாண்டு உணர்த்துவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் மெர்சிடிஸ் தனது படைப்புகளில் பண்பான விரிவாக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம் பொருட்களின் மீதான உரிமை நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தியில் உள்ள பொருளாதார விதிமுறைகள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படவுள்ளது.

இனி எண்ணிக்கையில் கவனம் கொள்ளாமல், பண்பான விரிவாக்கத்தை மெர்சடிஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது இந்தியளவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதன்மூலம் மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னிலை பெறுவது இனி வரும் நாட்களிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mercedes-Benz India sold 3,650 units for the period of January to March 2017, up by 1 percent; the Mercedes-Benz E-Class sedan emerged as the highest selling model.
Please Wait while comments are loading...

Latest Photos