”ஜி.எஸ்.டி குறித்து கவலை கொள்ளவேண்டாம்...” வாடிக்கையாளர்களுக்கு மெர்சிடிஸ் அறிவித்த புதிய சலுகை..!

Written By:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மெர்சிடிஸ் கார்களின் விலை ஜி.எஸ்.டி வரி விதிப்பால் குறையும் என மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிடும் முதல் கார் கம்பெனியான மெர்சிடிஸ், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது சி-கிளாஸ், ஜி.எல்.ஏ எஸ்.யூ.வி மற்றும் மேபக் மாடல் கார்களின் விலை ரூ.7 லட்சம் வரை குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வெளியான அறிக்கையில் கார்களின் சராசரியான விலை மதிப்பில் 4 சதவீதம் வரை விலை திருத்த நடவடிக்கையை மெர்சிடிஸ் இந்தியா மேற்கொள்கிறது.

மேலும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை விலையில் 4 சதவீத வரை விலை குறைக்கவும் மெர்சிடிஸ் முன்வந்துள்ளது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு பிறகு வாடிக்கையாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாம். அதனால் அதற்கு முன்னரே விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடுவதாக மெர்சிடிஸ் விளக்கமளித்துள்ளது.

தேசிய மற்றும் மாநில அளவிலான வரி விதிப்பு முறைகளை பின்பற்றி, மாடல்களுக்கு ஏற்றவாறு 2 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை மெர்சிடிஸ் இந்தியா கார்களின் விலையில் திருத்தம் செய்கிறது.

இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனம் சி.எஸ்.ஏ செடான், ஆடம்பர சி-கிளாஸ் செடான், இ-கிளாஸ், எஸ்-கிளாஸ், மேபேட்ச் எஸ்500 மற்றும் ஜி.எஸ்.ஏ ஜி.எஸ்.சி, ஜி.எஸ்.இ, ஜி.எஸ்.எஸ் எஸ்.யூ.வி கார்கள் என மொத்தம் 9 மாடல்களை தயாரித்து வருகிறது.

இந்த கார்கள் அனைத்தும் ரூ. 32 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை விலை மதிப்புடையது. தற்போது ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சி.எல்.ஏ செடான் கார்கள் ரூ.1.4 லட்சம் வரை விலை குறையலாம். மேபக் எஸ் 500 கார், ரூ. 7 லட்சம் வரை விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆடம்பரக் கார், எஸ்.யூ.வி கார் போன்ற பெரிய கார்களை வாங்குபவர்கள் தேசிய மற்றும் மாநிலளவில் 55 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

ஆனால் ஜி.எஸ்.டி வருகையால் கார்களுக்கான வரி அனைத்தும் அதிகப்பட்சமாக 43 சதவீதத்திற்குள் அடங்கிவிடும். தற்போது நடைமுறையில் உள்ள கலால் வரி, வேட் வரி உட்பட அனைத்து வரி விதிப்புகளும் ஜி.எஸ்.டி-க்கு கீழ் அடங்கிவிடும்.

ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கு முன்னரே மெர்சிடிஸின் இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புவதாக மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி ரோலாண்ட் ஃபால்ஜர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்பதால், இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஜி.எஸ்.டி-யால் எவ்வளவு வரி விதிப்பு பெறும் என்பதை அந்நிறுவனம் தீவிரமாக அலோசித்து வருகிறது.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மெர்சிடிஸின் இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும்.

இதனால் இந்தியாவின் ஆடம்பர கார் சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என ரோலாண்ட் ஃபால்ஜர் கூறுகிறார்.

English summary
Mercedes India Decided to cur Prices of the cars before Implementing GST in India. Click for More Details...
Please Wait while comments are loading...

Latest Photos