மெர்சிடிஸ் -மேபக் ஜி650 லான்டலெட் எஸ்யூவி வெளியீடு...!!

மெர்சிடிஸ் மேபக் ஜி650 லான்டலெட் எஸ்யூவியின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சில நாட்களுக்கு முன்பு மெர்சிடிஸ் ஜி வேகன் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக ஆன்லைனில் ஸ்பை படங்கள் வெளியாகின. அதுகுறித்து ஆய்வில் ஆட்டோமொபைல் துறையினர் பரபரப்பாக இறங்கிய வேளையில், அது மெர்சிடிஸ் மேபக் பிராண்டில் வரும் புதிய சொகுசு எஸ்யூவி கார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி500 மாடலின் அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த மாடலாக இந்த மெர்சிடிஸ் மேபக் ஜி650 லான்டலெட் எஸ்யூவி வருகை தர இருக்கிறது. மேலும், இது கன்வெர்ட்டிபிள் மாடலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, இந்த சொகுசு எஸ்யூவி மாடலின் படங்களை மெர்சிடிஸ் மேபக் பிராண்டு வெளியிட்டுள்ளது.

இந்த எஸ்யூவி 5,345மிமீ நீளமும், 2,235மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 3,428மிமீ என்பது குறிப்ப்பிடத்தக்கது. சாதாரண ஜி க்ளாஸ் எஸ்யூவியைவிட இது மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அதிக நீளம் கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த சொகுசு எஸ்யூவியில் ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பல தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த எஸ்யூவியில் போர்ட்டல் ஆக்சில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சக்கரங்களுக்கு இடையே நடுமையத்தில் இல்லாமல், சற்று மேலே தூக்கலாக இருக்கும். இந்த ஆக்சில்கள் மூலமாக கரடு முரடான சாலைகளில் செல்லும்போது ஆக்சில்கள் எளிதில் சேதமடையாது.

மேலும், இந்த ஆக்சில் அமைப்பு மூமலாக இந்த எஸ்யூவி 450மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மாறி இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 22 அங்குல சக்கரங்களும், 25/55R22 அளவுடைய டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த எஸ்யூவியில் 6.0 லிட்டர் வி12 பை-டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 630 பிஎச்பி பவரையும், 1,000 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவியின் பின் இருக்கை பகுதி திறந்து மூடும் கூரை அமைப்புடையதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எஸ் க்ளாஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மல்டிகான்டூர் என்ற மிக சொகுசான இருக்கைகள் இந்த எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இருக்கையை சாய்த்துக் கொள்வதற்கான பவர் அட்ஜெஸ்ட் வசதி, மசாஜ் வசதி என பல தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. மேலும், சொகுசாக இருக்கும் வகையில் காற்று நிரப்பும் வசதியும் உள்ளது.

இந்த எஸ்யூவியின் பின் இருக்கை பயணிகளுக்காக பல விசேஷ வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு 10 அங்குல உயர் துல்லிய திரைகள், தனி சென்டர் கன்சோல் அமைப்பு, இரண்டு க்ளவ் பாக்ஸ்கள் போன்றவை இடம்பெற்று இருக்கின்றன. இதனால், ஓட்டுனரை தொந்தரவு செய்யாமல் விருப்பம்போல இந்த பொழுதுபோக்கு சாதனங்களை கட்டுப்படுத்த முடியும்.

வலிமையான க்ரோம் க்ரில் அமைப்பு, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிராண்டு முத்திரை சின்னம், வி12 பைடர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதை காட்டுவதற்கான பேட்ஜ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. கார்பன் ஃபைபர் வீல் ஆர்ச்சுகள் பொருத்தப்ப்டடுள்ளன.

முன்புறத்திலும், பின்புறத்திலும் விசேஷ பம்பர் அமைப்பு, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த எஸ்யூவியில் எளிதாக ஏறி, இறங்குவதற்காக பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சைடு ஸ்டெப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 99 மெர்சிடிஸ் மேபக் ஜி650 லான்டலெட் 4×4² எஸ்யூவிகள் மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த எஸ்யூவி குறித்த பல அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும்.

புதிய டெஸ்லா மாடல் 3 காரின் படங்கள்!

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் சொகுசு காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The Mercedes-Maybach G650 Landaulet 4×4² convertible SUV has been revealed and here are all the details regarding engine specs, features, and production.
Please Wait while comments are loading...

Latest Photos