ஷாங்கய் கார் கண்காட்சியில் அறிமுகமாகும் 2017 எஸ்-கிளாஸ் செடன்

தோற்றத்தில் மாற்றமின்றி, தொழில்நுட்பங்களில் புதுமையுடன் மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய எஸ்-கிளாஸ் செடன் கார் ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் அறிமுகமாகவுள்ளது.

Written By:

2017ம் ஆண்டு ஷாங்காய் மோட்டார் கண்காட்சியில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிளாஸ் செடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு முன்னதாக வலைதளத்தில் காரின் அறிமுக டீசர் வெளியாகி வைரலாகியுள்ளது. 

இம்மாதம் 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை சீனாவின் வர்த்தக நகரமாக உள்ள ஷாங்காய் நகரத்தில் இந்தாண்டிற்கான மோட்டார் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கெடுக்கவுள்ள எஸ்-கிளாஸ் செடன் மாடலுக்கான டீசரை தற்போது மெர்சிடிஸ்-பென்ஸ் வெளியிட்டுள்ளது.

புதிய எஸ்-கிளாஸ் ஆடம்பர காரின் முன் பாகத்தின் வெளிப்பகுதியை, எல்.ஈ.டி விளக்குகள் கொண்டு அவுட்லைனில் ஒளிருவது போன்று டீசர் வெளியாகியுள்ளது.

இதை பார்க்கும்போது பென்ஸ் நிறுவனத்தின் முத்திரை பதித்த கார்களுக்கான வரிசையில் இதற்கும் வரவேற்பு இருக்கும் என்ற எண்ணம் எழுகிறது.

புதியதாக வெளியாகியுள்ள இந்த மாடலை, பயன்பாட்டில் உள்ள எஸ்-கிளாஸ் காருடன் ஒப்பிடும் போது தோற்றத்தில் எந்த மாறுபாடுகளும் பெரியளவில் இல்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக புதுமையுடன் 2017 எஸ்-கிளாஸ் காரை மெர்சிடிஸ் தயாராகியுள்ளது.

குறிப்பாக வரும் நாட்களில் டிரைவரில்லாமல் இயங்கக்கூடிய கார்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான இயக்கங்களை முன்னமே கொண்டு புதிய எஸ்-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் உருவாகியுள்ளது.

தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, அதற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்கள் இந்த எஸ்-கிளாஸ் மாடலை மாற்ற விரும்பினால். அதற்கான தொழில்நுட்பங்கள் இதில் உருவாக்கப்படக்கூடிய வாய்ப்புகளில் இது தயாராகியுள்ளது.

விரைவில் ஷாங்காய் நகரத்தின் மோட்டார் கண்காட்சியில் எஸ்-கிளாஸ் செடன் காரை மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த காருடன் செடன் மாடலில் மெர்சிடிஸ் தயாரித்துள்ள ஏ கிளாஸ் கார் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Mercedes has teased the upcoming S-Class facelift ahead of its debut at the 2017 Shanghai Motor Show.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK