புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்த கேரள டீலர்!

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் பாடி கிட்டை கேரளாவை சேர்ந்த நிப்பான் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Written By:

இந்திய சந்தையில் மிக மிரட்டலான எஸ்யூவி மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வலம் வருகிறது. இந்த நிலையில், டிசைன் மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் தோற்ற பொலிவை கூடுதலாக்கும் வகையில், கஸ்டமைஸ் நிறுவனங்கள் தங்களது கைவண்ணத்தை காட்டத் துவங்கி உள்ளன. அண்மையில் டிசி நிறுவனம் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, தற்போது கேரளாவை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர் ஃபார்ச்சூனர் எஸ்யூவியை கஸ்டமைஸ் செய்து அறிமுகம் செய்துள்ளது. கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் நிப்பான் டொயோட்டா என்ற டீலர்தான் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு கஸ்டமைஸ் பாடி கிட்டை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் உண்மையான உருவத்தில் சற்றே மாறுதல்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட், க்ரில், பம்பர் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்புற பம்பரை மறுவடிவமைப்பு செய்து கொடூரமான தோற்றத்தை கொடுத்துள்ளனர்.

கூரை மற்றும் பில்லர்கள் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு பாடி கலரிலிருந்து வித்தியாசப்படுத்தப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் கருப்பு வண்ண ஸ்பாய்லர், புதிய பம்பர் அமைப்பு ஆகியவை மாற்றங்களாக இருக்கின்றன.

இன்டீரியரில் மாற்றங்கள் இல்லை என்று தெரிகிறது. இது வெளிப்புறத்திற்கான பாடி கிட்டாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

டீசல் மாடலில் இருக்கும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 360என்எம் டார்க்கையும் வழங்கும். பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்த பாடி கிட்டை பொருத்திக் கொள்வதற்கு ரூ.2 லட்சம் கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு கொச்சி நிப்பான் டீலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Modified Toyota Fortuner from Cochin Toyota Dealer.
Please Wait while comments are loading...

Latest Photos