சாகசப் பயணத்திற்காக மாற்றியமைக்கப்பட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனரை, ஆஃப்ரோடிங், அட்வெஞ்சர் பயணத்திற்கென பிரத்யேகமாக மாற்றியமைத்துள்ளனர். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பிரம்மாண்ட எஸ்யூவியான டொயோட்டா ஃபார்ச்சூனர் எவ்வகையான கடின நிலப்பரப்பிலும் பயணிக்கும் வகையிலானது தான். ஆனால் அதுவும் போதாதென்று கூடுதலாக பல அம்சங்களை புகுத்தி, அதை வேறு அளவில் மாற்றியமைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் விலை மதிப்பிலானது டொயோட்டா ஃபார்ச்சூனர், அதனை பல சிறப்புகளுடன், சாகச பயணத்திற்கென பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார் அதன் உரிமையாளர். இது பார்ப்பவரை மலைக்க வைக்கும் என்பதோடு பல்வேறு சிறப்பு அம்சங்களும் இதில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

இதன் முன்புற பம்பரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இரும்பு பார் ஒன்றினை நிறுவியுள்ளனர். வழக்கமான மெஷ் கிரில்லை நீக்கிவிட்டு, உலோக தகடு கொண்டு மறைத்துள்ளனர். இதனால் ஃபார்ச்சூனரின் முகப்பு முரட்டுத்தனமாக காட்சியளிக்கிறது.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

கார் முழுவதும் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. பாடி மட்டுமல்லாது விளக்குகளையும் விட்டுவைக்காமல் கருப்பு வண்ணம் தரப்பட்டுள்ளது. இது காரின் முரட்டு பார்வைக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

இதன் பக்கவாட்டு படிக்கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மேலும் அதிகரிக்கிறது. முன்பக்கம் மட்டுமல்லாமல் இதன் பின்புறத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் செய்துள்ளனர்.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

பொதுவாக ஃபார்ச்சூனரில் பக்கவாட்டின் கடைசியில் ஜன்னல் இருக்கும், ஆனால் இதில் உள்ள ஜன்னலை இரும்பு தகடால் மறைக்கப்பட்டு அந்த இடத்தில் காரின் உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

ஆஃப் ரோடிங்குக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் பெரிய பிரம்மாண்ட மற்றும் அகலமான டயர்கள் உள்ளன. இது எப்பேர்ப்பட்ட பயண தளத்துக்கும் ஏதுவானதாகும். இது போதாதென, காரில் செல்ல முடியாத இடங்களுக்காக மலையேற்ற பைக் ஒன்றினை இதன் பின்பக்கத்தில் இணைத்துள்ளனர். முன்பக்கத்தில் சைக்கிள் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டுக்குமே அதே அடர் கருப்பு நிற பெயிண்ட்ங் தான்.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

இன்னும் முடியவில்லை, இதன் மேற்புறத்திலும் மாற்றங்கள் உள்ளன. தொலைதூர பயணத்திற்காக செல்லும் வேலையில் தங்க நேர்கையில், இதன் மேற்புறத்தில் அதற்காக கூடாரம் ஒன்றும் உள்ளது. தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில், இரண்டு தண்ணீர் தொட்டிகளும், துடுப்பு படகு இரண்டும் இதன் மேற்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஃபார்ச்சூனர் உங்களை மலைக்க வைக்கும்!

அட்வெஞ்சர் பயணத்திற்காக பிரத்யேகமாக மாற்றி வடிவமைக்கப்பட்ட இந்த டொயோட்டா ஃபார்ச்சூனரை எங்கு ஓட்டிச் சென்றாலும், கவலையில்லாமல் செல்லும் வகையில் அனைத்து உபகரனங்களையும் இதில் நிறுவியுள்ளனர்.

டொயோட்டா ஃபார்ச்சுனர் காரின் படங்கள் :

Most Read Articles
English summary
This Toyota Fortuner has been modified for extreme off-roading conditions and the SUV also gets all the necessary equipment needed for an expedition.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X