புதிய தலைமுறை பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் கார்: தெரிந்துகொள்ள வேண்டியவை

பி.எம்.டபுள்யூ அறிவித்துள்ள புதிய 5 சிரீஸ் கார் 7ம் தலைமுறைக்காக புதிய கூடுதல் ஆடம்பர வசதிகளுடன் அந்தஸ்தை கூட்டி வருகிறது.

By Azhagar

1972ம் ஆண்டிலிருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 7.6 மில்லியன் 5 சிரீஸ் கார்களை பி.எம்.டபுள்யூ நிறுவனம் விற்றுள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தற்போது புதிய 5 சிரீஸ் காரை உயர் தரங்களோடு பி.எம்.டபுள்யூ மேம்படுத்தியுள்ளது.

ஆடம்பரம் - அனுபவம் - அதிரடி ; வருகிறது புதிய பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் கார்

இந்தாண்டில் வெளிவரும் புதிய பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ்காரை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

எதிர்காலத்தை எண்ணி

எதிர்காலத்தை எண்ணி

  • பி.எம்.டபுள்யூ அடுத்த தலைமுறைக்கான 5 சிரீஸ் காரை, 7 சிரீஸ் காரின் பயன்பாடுகளை போலவே வடிவமைத்துள்ளது.
  • காரின் சாதனங்களை பட்டன்கள் இல்லாமல், சைகை மூலமாகவே இயக்கும் கெஸ்சர் கண்ட்ரோல்
  • மின்னணு திரையுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்டர்கள்
  • எஞ்சின் வேகத்தை பொருத்து, கார் இயக்கங்களை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் அடேப்டிவ் டிரைவிங் வசதி
  • ஓட்டுபவரின் பணியை சுலபமாக்கும் ஐ-டிரைவ் அமைப்பு
  • உயர்தர இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம்
  • ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் பார்க்கிங் செய்யும் வசதி.
  • என 7 சிரீஸ் கார்களுக்கு இருக்கும் வசதிகளுடன் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களோடு பி.எம்.டபுள்யூவின் புதிய 5 சரீஸ் கார் வெளிவருகிறது

    புதிய உள்கட்டமைப்புகள்

    புதிய உள்கட்டமைப்புகள்

    புதிய 5 சிரீஸ் கார்களில் உயர்ரகத்தில் தயாரிக்கப்பட்ட லெதர்களைக் கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் நாம் அமரும் முறைக்கு ஏற்றவாறு இந்த காரில் இருக்கைகளை சாய்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது

    முன் இருக்கைகளில் இன்ஃபோடெய்மெண்ட் பயன்பாடு கொண்டும், பின் இருக்கைகளில் சொகுசு மற்றும் இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

    மூன்று எஞ்சின் தேர்வுகள்

    மூன்று எஞ்சின் தேர்வுகள்

    புதிய பி.எம்.டபுள்யூ 5 சிரீஸ் மூன்று எஞ்சின் தேர்வுகளில் வரவிருக்கிறது. 6 சிலிண்டர்களுடன் கூடிய டீசல் எஞ்சினில் இயங்கும் மாடல் 255 பிஎச்பி பவரையும், 4 சிலிண்டர்களுடன் கூடிய டீசல் எஞ்சனில் இயங்கும் மாடல் 189 பிஎச்பி பவரையும், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினில் இயங்கும் மாடல் 251 பிஎச்பி பவரையும் வழங்கும் விதங்களில் புதிய பிஎம்.டபுள்யூ 5 சிரீஸ் தயாராகவுள்ளது.

    கியர் பாக்ஸ்

    கியர் பாக்ஸ்

    ZF 8ஸ்பீடு கியார்பாக்ஸ் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நான்கு சக்கரங்களுக்கும் எஞ்சனின் ஆற்றல் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    இதே கியர் பாக்ஸ் அமைப்பு பி.எம்.டபுள்யூவின் 7 சீரிஸின் எல்லா கார்களிலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    விலை

    விலை

    இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் பிஎம்.டபுள்யூ 5 சிரீஸ் கார், எஞ்சின் ஆப்ஷனை பொறுத்து ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 65 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது

    வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

    வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
    • 270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர்!
    • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
      • கார் மீது மோதி சுக்குநூறான கவாஸாகி சூப்பர் பைக்...!!
      • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
        • இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!
        • வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...
          • விஜய் மல்லையாவின் ஃபார்முலா-1 காரை காய்ச்சி எடுக்கும் நெட்டிசன்கள்!

ஆடம்பர வசதிகளிடனும், ஸ்மார்ட்டான தோற்றம் கொண்ட 2017 பி.எம்.டபுள் 5 சிரீஸ் காரின் புகைப்பட தொகுப்பை கீழே பாருங்கள்

Most Read Articles
English summary
You can have it with all-wheel drive or as a standard RWD model, both versions coming with the 8-speed ZF gearbox as standard.
Story first published: Thursday, March 16, 2017, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X