புதிய மாருதி டிசையர் கார் மே மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது!

வரும் மே மாதம் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written By:

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைக்கப்படும் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் நம்பர்-1 மாடலாக வலம் வருகிறது. அந்த செக்மென்ட்டில் மட்டுமின்றி, அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மாருதி டிசையர் காருக்கு புதுப்பொலிவு கொடுத்து மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் மே மாதத்தில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரின் உற்பத்திக்கு வழி விடும் வகையில், டாக்சி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள டிசையர் டூர் என்ற பழைய மாடலின் உற்பத்தி அடுத்த மாதம் நிறுத்தப்படுகிறது. வரும் மார்ச் மாதத்தில் புதிய மாருதி டிசையர் காரின் உற்பத்தி சோதனை அடிப்படையில் துவங்கப்படும். அடுத்து வரும் மாதங்களில் முழு வீச்சில் நடக்கும்.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் குறிப்பிடத்தக்க டிசைன் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். புதிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லைட், பனி விளக்குகள் அறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். அத்துடன், எல்இடி பகல்நேர விளக்குகளுடன் புதிய மாருதி டிசையர் கார் வருகிறது. புதிய பம்பர்கள், பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகளும் இந்த காரை புதிய தலைமுறைக்கு உயர்த்தும் மாற்றங்களாக இருக்கும்.

உட்புறத்தில் இரட்டை வண்ணக் கலவை பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், டச் ஸ்கிரீன் இன்ஃபபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கும். செவ்வக வடிவ ஏசி வென்ட்டுகள் வட்ட வடிவிற்கு மாறியிருப்பதாகவும் தெரிகிறது.

தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படும். அதேபோன்றே, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரில் எஸ்எச்விஎஸ் என்ற சுஸுகி நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய டிசையர் காரில் சக்திவாய்ந்த 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சினும் பொருத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.

குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுஸுகி நிறுவனத்தின் புதிய கார் ஆலையில் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. மாருதி இக்னிஸ் காருக்கு அடுத்து இரண்டாவது கார் மாடலாக அங்கு உற்பத்திக்கு செல்ல இருக்கிறது.

தற்போதைய மாடலைவிட சற்றே விலை அதிகம் கொண்டதாக இருக்கும். ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்கள்!

டுகாட்டி 1299 சூப்பர்லெகரா சூப்பர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The new avatar of the Swift Dzire will get some changes both inside and outside.
Please Wait while comments are loading...

Latest Photos