முற்றிலும் புதுசா... புத்தம் புதுசா வெளிவரும் 2018 ஹோண்டா அக்கார்டு கார் ..!!

Written By:

ஹோண்டா அக்கார்டு காரின் மேம்படுத்தப்பட்ட அமைப்பு 10 வது தலைமுறையாக 2018ல் வெளிவருகிறது.

தொழில்நுட்பம், செயல்திறன், ஆற்றல் மற்றும் வடிவம் என அனைத்து தளங்களிலும் புதுமையை பெற்றுள்ளது 2018 அக்கார்டு கார்.

அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள 2018 ஹோண்டா அக்கார்டு கார் இன்றைய ஆட்டோமொபைல் உலகின் தலைப்புச்செய்தியாக மாறியுள்ளது.

ஸ்டைலாகவும் ஒரு ஸ்போர்ட்ஸ் ரக தோற்றத்தில் இருக்கக்கூடியா அக்கார்டு காரில் இதுவரை இருந்து வந்த 4-சிலிண்டர் கொண்ட வி6 டர்போ சார்ஜிடு எஞ்சின் களையப்பட்டு புதிய ஹைஃபிரிட் அமைப்பு மற்றும் நியூ கேஸிஸ் என பெரிய மேக்ஓவரே செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அக்கார்டு காரில் உள்ள 2.4 இன்-லைன் 4 சிலிண்டர் எஞ்சின் மற்றும் வி6 ஆகியவற்றுக்கு பதிலாக ஹோண்டா சிவிக் காரில் உள்ளது போல டர்போசார்ஜிடு 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என பெட்ரோலில் இயங்கும் எஞ்சின்கள் 2018 அக்கார்டு மாடலில் பொறுத்தப்படுகின்றன.

சிவிக் காரில் உள்ள 2.0 லிட்டர் எஞ்சின் மூலம் அதிகம்பட்சமாக 250 பிஎச்பி பவர் மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

மேலும் 1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் அதிகப்பட்சமாக 189 பிஎச்பி பவர் மற்றும் 260 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

1.5 லிட்டர் எஞ்சின் கொண்ட கார் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் எஞ்சின் காரில் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டரை கொண்டுள்ளது.

மேலும் இதே மாடலில் உள்ள ஸ்போர்ட் வேரியண்ட் காரில் 6-ஸ்பீடு மேனுவல்கியர்பாக்ஸ் இருக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

ஹோண்டா அக்கார்டு காரில் ஹைஃபிரிட் தொழில்நுட்பத்தை தேர்வு செய்பவர்களுக்காக, அந்த மாடல் காரில் 2-லிட்டர் அட்கின்சன் சைக்கிள் எஞ்சின், மின்சார மோட்டார்கள் கூட்டணியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடைய செயல்திறனுக்கான தேவைகள் மற்றும் முடிவுகளை ஹோண்டா விரைவில் அறிவிக்க உள்ளதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பிற்கான கட்டமைப்பில் புதிய அக்கார்டு காரில் அளவான பிரேக்கை வழங்கும் அமைப்பு, லேன் குறித்த எச்சரிக்கை, சாலை குறித்த எச்சரிக்கை, அடேப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் தேவைகள் கவனிக்கும்படியானவை.

தற்போதுள்ள மாடலை விட இந்த புதிய ஆக்கார்டு காருக்கு வீல்பேஸ் 50மிமீ கூடுதலாக உள்ளது. முக்கியமாக காரின் நீளம் குறைந்துள்ளது. அதேபோல ருஃப்லைனும் தேவைகளை கருதி 15மிமீ குறைக்கப்பட்டுள்ளது.

காரின் முன்பக்கத்தில் பம்பர், ஹோண்டா விங் மற்றும் கிரோம் லைனிங் கொண்ட எல்.இ.டி முகப்பு விளக்குகள் என புதிய வடிவில் உள்ளது 2018 அக்கார்டு கார்.

உள்கட்டமைப்பில் கேபினில் தெம் ரெஸ்ட் மற்றும் பேடில் ஷிஃப்டெர்ஸ் கொண்ட ஸ்டீயரிங் வீல், 12 விதமான அட்ஜெஸ்ட்மெண்டுடன் கூடிய ஓட்டுநர் இருக்கை, என அனைத்தும் மிருதுவான தொடுதல் வசதியுடன் உள்ளது.

டாஷ்ஃபோர்டில் 8.0 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஏப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரு தேவைகளையும் இணைத்துக்கொள்ளலாம்.

கூடுதலாக 6.0 அங்குலத்தில் ஹெட்-அப் டிஸ்பிளேவும் 2018 ஹோண்டா அக்கார்டு காரில் இருப்பது தனிச்சிறப்பு.

அமெரிக்காவின் உள்ள ஓஹியோ மாகணத்தின் ஹோண்டா தொழிற்சாலையில்தான் 2018 அக்கார்டு கார் தயாராகவுள்ளது.

ஹைஃபிரிட் தொழில்நுட்பத்திலும் இந்த கார் வெளிவரவுள்ளதால் அதற்கான மோட்டார் தேவைகள் ஓஹியோவின் மற்றொரு பகுதியில் உள்ள ஹோண்டாவின் தொழிற்சாலையில் தயாராகவுள்ளன.

2018ல் அறிமுகமாக இருந்தாலும், ஆட்டோமொபைல் உலகில் புதிய ஆக்கார்டு கார் 2017ம் ஆண்டே இந்தியாவில் வெளிவரலாம் என தகவல்கள் உலாவருகின்றன.

இருந்தாலும் இதுக்குறித்த எந்த உறுதியான தகவல்களும் தற்போது ஹோண்டா சார்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

ஹைஃபிரிட் தரத்தில் தயாராகும் கார்களுக்கு புதிய 2018 ஹோண்டா அக்கார்டு மாடல் நல்ல முன்மாதிரியாக இருக்கும்.

இதிலுள்ள புதிய தொழில்நுட்பம், தேவைகள் மற்றும் தோற்றம் ஆகியவை இந்த தரம் சார்ந்த கார்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளன.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil: Honda Accord was unveiled in its tenth-generation iteration. The new Accord debuts with a new powertrain lineup. Click for Details...
Story first published: Saturday, July 15, 2017, 13:17 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos