புதிய தலைமுறை ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

புதிய மேம்படுத்தப்பட்ட சொனாட்டா காரை ஹுண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், அதன் சொனாட்டா கார்களை 1985ஆம் ஆண்டு முதலாக தயாரித்து வருகிறது. இந்தியாவில் 6வது தலைமுறை சொனாட்டா கார்கள் விற்பனையில் உள்ள நிலையில் தற்போது இதன் 8வது தலைமுறை கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதனை விரிவாக காணலாம்.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

மிட் சைஸ் செடன் காரான சொனாடா, ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடலாக நீண்ட காலமாக திகழ்ந்து வருகிறது. விற்பனையில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், தோற்றத்தில் இவை கவர்ந்து இழுப்பதால் இதற்கென ரசிகர் வட்டம் இந்தியாவில் உள்ளது.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய டிசைன் தொலில்நுட்பம் கொண்டு அடுத்த தலைமுறை சொனாட்டா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சொனாடாவை விடவும் இது பார்வைக்கு கவர்ச்சிகரமாக உள்ளது. விற்பனையில் சிறந்து விளங்கும் வகையிலான மாற்றங்கள் கண்டுள்ளது புதிய சொனாட்டா கார்.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

புதிய தலைமுறை சொனாடாவில் அறுகோண வடிவ கிரில், பகல் நேரத்தில் எரியும் வகையிலான முகப்பு விளக்குகள், மேம்படுத்தப்பட்ட புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், எல்ஈடி பின்புற விளக்குகள் ஆகியவை வெளிப்புற தோற்றத்தில் உள்ள புதிய மாற்றங்களாகும்.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

இதன் உட்புறத்தில் புதிய ஏர்கண்டிஷன் சிஸ்டம், வெண்டிலேஷன் சிஸ்டம், ஆடியோ மற்றும் ஹீட்டிங் கண்ட்ரோல்கள், 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஆகியவை உள்ளன. மேலும், 8 இஞ்ச் டிஸ்பிளே ஆஃப்ஷனலாகவும் கிடைக்கிறது.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக சொனாட்டா கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் லேன் மாறினால் எச்சரிக்கும் ‘லேன் கீப் அஸிஸ்ட்', ஓட்டுநருக்கு மிகவும் தேவையான ‘பிளைண்ட் ஸ்பாட் டிடக்‌ஷன்', ரியர் - கிராஸ் டிராஃபிக் அலர்ட், ஹை பீம் அசிஸ்ட், டைனமிக் பெண்டிங் லைட்ஸ் ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

இந்த புதிய சொனாடாவில் நான்கு வகையான இஞ்சின்கள் உள்ளன. அதிகபட்சமாக 139 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.7 லிட்டர் விஜிடி இஞ்சின், அதிகபட்சமாக 177 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.6 லிட்டர் டி-ஜிடிஐ இஞ்சின்.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

மேலும், அதிகபட்சமாக 160 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் இஞ்சின் மற்றும் அதிகபட்சமாக 241 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு இஞ்சின் ஆகியவை உள்ளது.

புதிய ஹூண்டாய் 2017 சொனாட்டா கார் அறிமுகம்

இந்த 8வது தலைமுறை சொனாட்டா கார், இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவருகிறது. ஆயினும், எந்த வகையிலான இஞ்சின் இதில் கொடுக்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதிய 2017 ஹுண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணுங்கள்:

Most Read Articles
English summary
The new Hyundai Sonata has been launched and it is only a matter of time till the sedan makes its way to India. Read on for more details.
Story first published: Thursday, March 9, 2017, 11:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X