டாடா சஃபாரியுடன் நேருக்கு நேர் மோதி சிதைந்து போன புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கி இருக்கிறது. அதன் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியிருக்கிறது. எதிரே வந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியுடன் நேருக்கு நேர் மோதியதில், புதிய தலைமுறை மாருதி கார் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் நகர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டாடா சஃபாரி காருடன் புதிய மாருதி டிசையர் கார் மோதி இருக்கிறது.

மேலும், அதிவேகத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி மறுபுறத்தில் சென்று இருக்கிறது. அப்போது சாலையின் மறுபுறத்தில் வந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியுடன் நேருக்கு நேர் மோதி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த சம்பவத்தில் டிசையர் காரின் ஓட்டுனர் பகுதி உள்பட பக்கவாட்டு பகுதி மிக மோசமான உருக்குலைந்து போயுள்ளது. இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்குப்பட்டு புதிய டிசையர் காரின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டு இருக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால், இந்த படங்களை பார்க்கும்போது டிசையர் காரின் கட்டுமானம் இன்னமும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மறுபுறத்தில் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் முன்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. பயணிகள் பகுதி அதிகம் சேதமடையவில்லை.

வரும் 16ந் தேதி புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நேரத்தில், டீலருக்கு அனுப்பப்பட்ட புதிய டிசையர் கார் விபத்தில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. டீலர் பணியாளர் இந்த காரை ஓட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக டீலர் பணியாளர்கள் இதுபோன்ற புதிய கார்களை அதிவேகத்தில் ஓட்டி, மிக மோசமான விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி இருக்கிறது. இந்த விபத்தில் காரை ஓட்டியவர்கள், காரில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரிய வில்லை.

புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வருவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் இவ்வேளையில், துரதிருஷ்டவசமாக புதிய மாருதி டிசையர் கார் பயங்கர விபத்தில் சிக்கி இருப்பதுடன், அதன் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்துவதாகவே இந்த விபத்து அமைந்துள்ளது.

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றிருக்கும். 

ஆனால், அவை எல்லாம் இருந்தும் சிறப்பான கட்டுமானம், மோதல் தாக்கத்தை உள்வாங்கிக் கொள்ளும் க்ரம்பிள் ஸோன் கட்டமைப்பு போன்றவையும் மிக முக்கியம். 

பழைய தலைமுறை மாருதி டிசையர் கார்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்களில் கட்டுமானம் குறித்து விமர்சிக்கப்படுவது உண்டு. ஆனால், புதிய மாடலில் அந்த குறைகள் களையப்பட்டு இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், இந்த படங்கள் பக்கவாட்டு மோதலின்போது பயணிகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையிலேயே இருப்பது துரதிருஷ்டவசமானதாகவே கருத முடியும். 

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Thursday, May 11, 2017, 12:42 [IST]
English summary
New Maruti Dzire First Crash Reported In India.
Please Wait while comments are loading...

Latest Photos