அட்ராசக்கை... மாருதி டிசையர் காருக்கு இமாலய புக்கிங்!

புதிய மாருதி டிசையர் காருக்கு 33,000க்கும் அதிகமான முன்பதிவு குவிந்துள்ளது.

Written By:

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னரே புக்கிங்குகளை வாரி குவித்துள்ளது புதிய மாருதி டிசையர் கார். இதனால், காத்திருப்பு காலம் நீண்டு போனதால், விலையை தெரிந்து கொண்டு முன்பதிவு செய்ய காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் நேற்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பு, வசதிகளில் நவீன யுக மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களிடத்தில் ஏகத்துக்கும் ஆவல் இருந்தது.

இந்த நிலையில், விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே புதிய மாருதி டிசையர் காருக்கு முன்பதிவு துவங்கிவிட்டது. மாருதி டிசையர் மீதான நம்பகத்தன்மை காரணமாக, டீலர்களில் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர்.

இதனால், விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சுமார் 33,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை வாரி குவித்துள்ளது புதிய மாருதி டிசையர் கார். மேலும், சில வேரியண்ட்டுகளுக்கு 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீண்டுள்ளதாக டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெட்ரோல் மாடலுக்கு அதிக முன்பதிவு குவிந்து வருகிறதாம்.

புதிய மாருதி டிசையர் காரின் வடிவமைப்பில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், எடை குறைவானதாகவும், அதிக உறுதிமிக்க கட்டுமானத்திலும் உருவாக்கப்பட்டு இருப்பதால், பாதுகாப்பு மேம்பட்டு இருப்பதுடன், மைலேஜும் அதிகரித்துள்ளது.

இந்த காரில் 82 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கக்கூடிய 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.40 கிமீ மைலேஜையும் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் மைலேஜில் மாருதி கில்லி. எனவே, வாடிக்கையாளர்களை புதிய மாருதி டிசையர் கார் பெரிதும் கவர்ந்துள்ளது.

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டியூவல் ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. இந்த காரில் 376 லிட்டர் பூட்ரூம் இடவசதி இருப்பதும் கூடுதல் சிறப்பாக கூறலாம்.

புதிய மாருதி டிசையர் கார் ரூ.5.45 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விற்பனையில் புதிய மாருதி டிசையர் பல புதிய சகாப்தத்தை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

விலை விபரம் நேற்று வெளியிடப்பட்டதை அடுத்து, வரும் நாட்களில் இந்த முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த காருக்கு காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
New Maruti Dzire Gets 33,000 bookings.
Please Wait while comments are loading...

Latest Photos