புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள்!

புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் படங்கள் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக புதிய மாருதி டிசையர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மாருதி பெலினோ கார் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில் இருந்து வேறுபட்ட வடிவமைத்து தத்துவத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

பழைய மாடலைவிட புதிய தலைமுறை மாடல் 40மிமீ கூடுதல் வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, அகலமும் 40 மிமீ அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கேபினில் அதிக இடவசதி ஏற்பட்டுள்ளது.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

பூட்ரூம் ஒட்ட வைத்தது போன்ற பின்புற டிசைனிலும், கூரை அமைப்பிலும், பானட்டிலும் மாறுதல்களை செய்து ஒருவழியாக முழுமையான செடான் கார் போன்ற தோற்றத்துக்கு மேம்படுத்த முனைந்துள்ளனர் மாருதி டிசைனர்கள்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

புதிய மாருதி டிசையர் காரின் முகப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஒற்றை க்ரில் அமைப்பு சுற்றிலும் க்ரோம் பட்டை அலங்காரம் போன்றவை வசீகரம் தருகிறது. பம்பர் டிசைனும், பனி விளக்குகள் அறை டிசைனும் காரின் முகப்புக்கு வலுசேர்க்கும் டிசைன் அம்சங்களாக இருக்கின்றன. எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளும் காருக்கு கூடுதல் சிறப்புகள்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

ஏ பில்லர் மற்றும் சி பில்லர்கள் இப்போது சீராக வளைந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டு இருப்பதால், காரின் உயரம் குறைந்துள்ளது. பார்ப்பதற்கும் சீரான தோற்றத்தை தருகிறது.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

பூட் ரூம் மூடியில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், எல்இடி டெயில் லைட்டுகளின் டிசைன் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது கவர்ச்சி. புதிய மாருதி டிசையர் காருக்கு 14 இன்ச் மற்றும் 15 இன்ச் என இரண்டுவிதமான சக்கரங்கள் கொடுக்கப்பட உள்ளன. டாப் வேரியண்ட் மாடல் 15 இன்ச் அளவுடைய டைமன்ட் கட் அலாய் வீல்களுடன் கிடைக்கும்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

புதிய மாருதி டிசையர் காரின் இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கும். தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டில் ஃபாக்ஸ் வுட் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கிறது. பின்புற இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்குள் இருக்கின்றன. சைல்டு சீட் பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

புதிய மாருதி டிசையர் கார் ஆர்டிக் ஒயிட், சில்க்கி சில்வர், மேக்மா க்ரே, கேலண்ட் ரெட், ஷெர்வுட் பிரவுன் மற்றும் ஆக்ஸ்போர்ட் புளூ ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

 புதிய மாருதி டிசையர் கார் அறிமுகம்... !

புதிய மாருதி டிசையர் காருக்கு ரூ.5,000 முன்பணத்துடன் டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. புதிய மாருதி டிசையர் கார் அடுத்த மாதம் 16ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அன்றைய தினம் விலை விபரம் அறிவிக்கப்படும்.

Most Read Articles
English summary
The 2017 Maruti Suzuki Dzire has been unveiled ahead of its official launch next month.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X