பெர்லினில் 6ம் தலைமுறைக்கான வோக்ஸ்வேகன் போலா கார் அறிமுகம்; முற்றிலும் புதுமையாக, புதிய வடிவில்..!!

இந்தியாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய வோக்ஸ்வேகன் போலா கார் ஜெர்மன் பெர்லினில் அறிமுகப்படுத்தப்பட்டது.

By Azhagar

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினில் தற்போது பிராங்ஃபூர்ட் மோட்டார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 6ம் தலைமுறைக்கான போலா ஹேட்ச்பேக் மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

புதிய போலா கார் தோற்றத்தில் தற்போதைய மாடலை பின்பற்றினாலும், அதனுடைய தொழில்நுட்பம் மற்றும் இடவசதியில் பெரிய மாறுபாடு உள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

தற்போதைய மாடலை விட அதிக இட வசதி கொண்டதாகவும், தொழில்நுட்ப தயாரிப்பில் அதிக முன்னேற்றதுடனும் புதிய போலா கார் தயராகி உள்ளது.

4 விதமான திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின்களுடன் மற்றும் ஒரு மாடல் டீசல் எஞ்சின் கொண்டும் 2017 போலோ அறிமுகமாகி உள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

டர்போசார்ஜிடு பெற்ற 1.6 லிட்டர் வோக்ஸ்வேகன் போலோ டீசன் எஞ்சின் கார் இரண்டு விதமான நிலைகளில் 80 மற்றும் 95 பி.எச்.பி-யை வெளிப்படுத்தும்.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

டர்போசார்ஜிடு பெற்ற 1.6 லிட்டர் வோக்ஸ்வேகன் போலோ டீசன் எஞ்சின் கார் இரண்டு விதமான நிலைகளில் 80 மற்றும் 95 என்ற பி.எச்.பி-யை வெளிப்படுத்தும்.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

1.0 லிட்டர் திறனுடன் அடிப்படை மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மாடல், 64 பிஎச்பி அல்லது 74 பி.எச்.பி பவரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

அதிக செயல்திறனுடன் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட போலோவின் மற்றொரு மாடல் 95 பிஎச்பி அல்லது 114 பிஎச்பி பவரை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

1.5 லிட்டர் பெட்ரோல் டர்போசார்ஜிடு எஞ்சின் கொண்ட 6ம் தலைமுறை போலா மாடல் கார் 148 பிஎச்பி பவரை வழங்கும். இதில் கூடுதலாக எரிவாயு சேமிக்கும் திறனும் உள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

கியர்பாக்ஸ் தேவைகளை பொறுத்தவரை 5 மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. மேலும் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

போலா மாடலில் அதிக செயல்திறன் கொண்டதாக இருப்பது போலா ஜி.டி.ஐ. 2.0 லிட்டர் டர்போ சார்ஜிடு எஞ்சின் கொண்ட இந்த காரில் 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது 196 பி.எச்.பி பவர் மற்றும் 8 பிஎச்பி பவரை வழங்கும்.

சிறிய கார்களுக்காக வோக்ஸ்வேகன் வகுத்துள்ள ஏஓ பிளாட்ஃபிராம் கீழ் தான் இந்த புதிய போலா கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

4053மிமீ நீளம், 1751மிமீ அகலம் மற்றும் 1446மிமீ உயரம் கொண்டதாக இந்த புதிய கார் உள்ளது. இந்த அளவுகோளை பொறுத்தவரை பழைய மாடலை விட இது அதிக இடவசதி கொண்டது தான்.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

காரின் முன் பகுதி மற்றும் பின் பகுதி இரண்டும் இன்னும் வலிமையான தோற்றத்தை தருகின்றன. சி- வடிவிலான டி.ஆர்.எல் முகப்பு விளக்குகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதில் உள்ள ஆர்-லைன் பகுதி 2017 போலோ காருக்கு புதிய ஸ்போர்ட்ஸ் வடிவத்தை தருகின்றன.

2017 வோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் கார் அறிமுகம்..!

தனித்துவமான பம்பர்கள், ஹனிகம்ப் கிரில், ஹெட்லேம்புகளுடன் கூடிய ரெட் ஹைலைட்டு விளக்குகள் மற்றும் 17 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவை காரின் தரத்தை மேலும் உயர்த்தி காட்டுகின்றன.

Most Read Articles
English summary
German automotive giant Volkswagen has revealed the all-new sixth-generation Polo hatchback in Berlin. Click for details...
Story first published: Saturday, June 17, 2017, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X