2017 நிஸான் சன்னி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் நிஸான் சன்னி கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

Written By:

சிறப்பான இடவசதி, செயல்திறன் மிக்க எஞ்சின் போன்றவற்றில் நிஸான் சன்னி கார் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், கூடுதல் பொலிவுடன் புதிய நிஸான் சன்னி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

புதிய நிஸான் சன்னி கார் இப்போது சேன்ட்ஸோன் பிரவுன் என்ற விசேஷ பழுப்பு வண்ணத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், கைப்பிடிகள் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் பெரிய மாறுதல்கள் எதுவும் செய்யப்படவில்லை.

அதேபோன்று உட்புறத்தில் முழுவதும் கருப்பு நிற இன்டீரியரை தேர்வு செய்து கொள்ள முடியும். புதிய கருப்பு வண்ண ஃபேப்ரிக் இருக்கைகள், கருப்பு வண்ண பேனல்களுடன் புதிய நிஸான் சன்னி கார் வந்துள்ளது.

புதிய நிஸான் சன்னி காரில் இன்டெலிஜென்ட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி தொழில்நுட்பம், பிரேக் அசிஸ்டம், இரண்டு ஏர்பேக்குகள் ஆகிய கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

 

பெட்ரோல் மாடலில் 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.95 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

டீசல் மாடலில் 85 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் கே9கே எஞ்சினும் இடம்பெற்று இருக்கிறது. டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். டீசல் மாடல் லிட்டருக்கு 22.71 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

2017 நிஸான் சன்னி விலை விபரம்

பெட்ரோல் வேரியண்ட்டுகள்

எக்ஸ்இ: ரூ.7.91 லட்சம்
எக்ஸ்எல்: ரூ.8.40 லட்சம்
எஸ்வி-சிவிடி: ரூ.10.89 லட்சம்

[குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.]

டீசல் வேரியண்ட்டுகள்

எக்ஸ்இ: ரூ.8.80 லட்சம்
எக்ஸ்எல்: ரூ.9.46 லட்சம்
எக்ஸ்வி: ரூ.9.93 லட்சம்
எக்ஸ்வி சேஃப்டி பேக்: ரூ.10.76 லட்சம்

[குறிப்பு: அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.]

இந்த காருக்கு 2 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ தூரத்துக்கான வாரண்டியும், இலவச அவசர சாலை உதவி திட்டத்தையும் நிஸான் வழங்குகிறது. இது அனைத்து நிஸான் சன்னி கார்களுக்கும் பொருந்தும். நாடு முழுவதும் உள்ள அனைத்து நிஸான் ஷோரூம்களிலும் இந்த புதிய மாடல் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய நிஸான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரின் படங்கள்!

புதிய நிஸான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் காரை அணு அணுவாக கண்டு ரசிக்க கீழே உள்ள ஆல்பத்தை க்ளிக் செய்யவும்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
The 2017 Nissan Sunny has been launched in India and brings with it a host of upgrades to the company's flagship sedan.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK