புத்தம் புதிய வடிவமைப்பில் நிஸான் களமிறக்கும் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல்; எப்போது..?

புத்தம் புதிய வடிவமைப்பில் நிஸான் களமிறக்கும் சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல்; எப்போது..?

By Azhagar

இந்திய சந்தையை பொறுத்தவரை இனி இரண்டு தளங்களில் மட்டுமே ரென்லாட் நிறுவனத்துடன் இணைந்து நிஸான் பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

இந்திய சந்தையில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெற்றிக்கூட்டணி அமைத்து வரும் நிறுவனங்கள் தான் நிஸான் மற்றும் ரெனால்ட்.

இதில் நிஸான் தற்போது சன்னி காருக்கான ஃபேஸ்லிஃப்ட் மாடலை தயாரிப்பத்தில் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

நிஸான் சமீபத்தில் வெளியிட்ட மைக்ரோ ஹேட்ச்பேக் காரான கே14 மாடலை சார்ந்து புதிய சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

எனினும் இந்த காரினுடைய வில்பேஸ் கே 14 போன்று இல்லாமல், வடிவமைப்புக்கு ஏற்றவாறு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

இதனால் தற்சமயம் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள சன்னி கார் போன்று, புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல் இருக்காது என்பது நமக்கு தெரியவருகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

கிடைத்திறக்கக்கூடிய சிறிய தகவல்கள்படி, புதிய சன்னி கார் நீளம் குறைவுடனும், கொஞ்சம் உயரம் குறைவுடனும் தயாரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

இருந்தாலும் பயணிகள் மற்றும் ஓட்டுநரின் தேவைகளை கருதி, புதிய சன்னி காரினுள் இடவசதி மற்றும் செயல்திறனை கூட்ட வடிவமைப்பாளர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

ரெனால்ட் டஸ்டர் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய சன்னிக்கு வழங்கப்படவுள்ளது. நான்கு சிலிண்டர் கொண்ட இந்த எஞ்சின் 104 பிஎச்பி பவர் தரும் வல்லமை கொண்டது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

சர்வதேச சந்தைகளில் வெளியான பிறகு புதிய சன்னி 2018ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாலாம் என்று தெரிகிறது.

வெளிநாடுகள் போல் இல்லாமல், 2018 நிஸான் சன்னி கார் டீசல் மாடலிலும் இந்தியாவில் வெளிவருகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

நிஸான் நிறுவனம் சன்னி காரை தாண்டி, நிஸான் கில் மற்றும் ரெனால்ட் கப்தூர் உள்ளிட்ட மாடல்களையும் இந்திய சந்தையில் அடுத்தடுத்து களமிறக்குகிறது.

சன்னி ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட நிஸான் முடிவு..!!

இந்திய சந்தையில் பெரிய விற்பனை திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படும் 2018 நிஸான் சன்னி கார், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டா வெர்னா ஆகிய கார்களுக்கு விற்பனையில் போட்டியாக அமையும்.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Read in Tamil: Nissan To Launch New Sunny Facelift Model At 2018. Click for Details...
Story first published: Monday, July 17, 2017, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X