பழைய கார், பைக்குகளை விற்பதற்கு ஜிஎஸ்டி வரி உண்டா? - மத்திய அரசு விளக்கம்!

Written By:

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்திருக்கும் நிலையில், பல்வேறு குழப்பங்களும் நிலவி வருகிறது. ஜிஎஸ்டி வரி வாகன சந்தையிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பழைய கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.

பழைய கார்கள் மீது 5 சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டு வந்தநிலையில், ஜிஎஸ்டி.,யின் அடிப்படையில் 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், பழைய கார் மார்க்கெட்டில் பலத்த அடி விழும் நிலை ஏற்பட்டது.

ஜிஎஸ்டி வரி பன்மடங்கு உயர்ந்ததால், அதனை சமாளிக்க பழைய கார்களின் மதிப்பு வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டது. மறுபக்கத்தில், பழைய கார் வாங்குவோர் மதிப்பைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்னையால் பழைய கார் மார்க்கெட்டின் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அவசர தேவைக்காகவும், புதிய கார் வாங்குவதற்காக காரை எக்ஸ்சேஞ்ச் செய்ய முயன்றவர்களுக்கும் ஜிஎஸ்டி அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி குழப்பத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது," பழைய கார், பைக்குகளை விற்பனை செய்யும் தனி நபர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த தேவையில்லை.

ஜிஎஸ்டி வரி விதிப்பு சட்டத்தின் 9[4] பிரிவின் கீழ் பழைய கார் மற்றும் பைக்குகளை விற்பனை செய்யும் தனிநபர்கள் தொழில்முறை வர்த்தகமாக தங்களது வாகனத்தை விற்கவில்லை. தங்களது சுய தேவையின் அடிப்படையில் விற்பனை செய்வதாக கருத முடியும். அவ்வாறு, தனி நபர் விற்பனை செய்யும் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

அதேநேரத்தில், ரிவர்ஸ் சார்ஜ் விதிகளின் அடிப்படையில், பழைய கார்களை வாங்கி விற்கும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று ஆதியா கூறி இருக்கிறார். இதனால், பழைய கார் விற்பனை செய்வோர் மத்தியில் இருந்த குழப்பம் சற்றே நீங்கி இருக்கிறது.

இருப்பினும், பழைய கார்களை வாங்கும் முகவர்கள், நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி வரியை வாடிக்கையாளர் தலையிலேயே சுமத்துவர். எனவே, காரின் மதிப்பை குறைத்தே வாங்குவர் என்று கூறலாம்.

English summary
No GST on sale of used cars and bikes by individuals.
Story first published: Friday, July 14, 2017, 12:37 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos