இந்தியாவில் முத்திரை பதித்த பழைய கார்களும் அதன் சிறப்புகளும்..!

இந்தியாவில் முத்திரை பதித்த முந்தைய தலைமுறை கார்களும், அதன் சிறப்புகள் குறித்தும் இத்தொகுப்பில் காணலாம்.

Written By:

நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் கார்கள் ஓட்ட சொகுசாகவும், பல தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. எனினும் 1980 - 90 காலகட்டங்களில் இருந்த கார்களை பார்க்கும் மகிழ்ச்சியை புதிய கார்களில் காணமுடிவதில்லை.

கார்கள் வைத்திருப்பதே அரிது என்றிருந்த காலகட்டம் அது. ஒரு சில வீடுகளில் தான் கார்களே இருக்கும். வீதிகளில் செல்லும் கார்களை வாயை மூட மறந்து பார்த்த பருவம் அது.

நம் இளமை கால நினைவுகளை அழகாக்கியதில் அக்காலகட்ட கார்களும் முக்கிய பங்கு வகித்தன. நினைவில் இருந்து நீங்காத அந்த பழைய கார்களை பற்றி சின்னதாய் ஒரு ரீவைண்ட்.

அம்பாஸிடர்

இந்தியாவில் நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்த கார் என்ற சாதனையை படைத்த அம்பாஸிடர் 56 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.

அம்பாஸிடர்

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரிப்பில் உருவான இந்த மாடல் இந்திய ஜனாதிபதி முதல் உள்ளூர் அதிகாரி வரை அனைத்து தர அரசு அதிகாரிகளாலும் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் அரசு வாகனமாக திகழ்ந்தது.

அம்பாஸிடர்

அம்பாஸிடரில் சென்றால் லாரியில் மோதினால் கூட தப்பிப்பிழைக்கலாம் என்று ஒரு சொல் உண்டு. ஏர் பேக்குகள் இல்லாத காலகட்டத்தில் இருந்த உயர்ரக பாதுகாப்பு கொண்ட கார் இது.

பிரீமியர் பத்மினி

நீங்கள் 1950களுக்கு மேற்பட்டு பிறந்தவர் என்றால் இந்த காரை ஓட்டும் அல்லது பயணித்திருக்கும் வாய்ப்பை நிச்சயம் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.

பிரீமியர் பத்மினி

பிரீமியர் பத்மினி அல்லது ஃபியட் என்று பாசத்துடன் இதனை அழைப்பதுண்டு. அப்போது இருந்த சில ஆர்வக்கோளாருகள் இந்தக் காரை ரேஸிற்கும் பயன்படுத்திய வரலாறு உண்டு.

பிரீமியர் பத்மினி

நம்ம விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் கூட பத்மினி காருடனான ஒரு பண்ணையாரின் காதலை மிக அழகாக காட்டியிருப்பர்..

மஹிந்திரா எம்எம்540

1950களில் பிரலமாக இருந்த சிஜே5 என்ற ஜீப்பின் வழித்ஹோன்றலாக உருவாக்கப்பட்டதே இந்த எம்எம்540 ஜீப்.

80-90களில் டிரைவிங் தெரியாதவர்கள் பலரும் இந்த ஜீப்பில் தான் டிரைவிங் பழகியிருப்பர்.

மஹிந்திரா எம்எம்540

சாலையென்றாலும் சரி, சாலையேயில்லாத கடின நிலப்பரப்பு என்றாலும் சரி, எனக்கென்ன என்றுசெல்லும் இது சிறந்த ஆஃப் ரோடிங் வாகனம் ஆகும். எஸ்டேட்களிலும், டிரைவிங் பழகித்தரும் இடங்களிலும் அதிகமாக இதனை காணலாம்.

மாருதி 800

இந்தியாவின் நீண்டகால தயாரிப்பில் இருந்த 2வது கார் இது. 1983ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆட்டோமொபல் துறையில் இந்தக் கார் மறுமலர்ச்சியையே ஏற்படுத்தியது எனலாம்.

மாருதி 800

ஸ்டைல், செயல்திறன், நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் குறைந்த ஓட்டுதல் செலது உள்ளிட்டவைகளை ஒரே காரில் அதுவரையில் இந்தியர்கள் எந்த காரிலும் கண்டிருக்கவில்லை.

மாருதி 800

பலருக்கு கார்கள் மீதான ஈர்ப்பை அளித்ததே மாருதி 800 என்றுகூட கூறும் அளவுக்கு முந்தைய தலைமுறையின் லட்சக்கணக்கானவர்களுடன் உறவாடிய கார் இது.

மாருதி ஆம்னி

கார் என்ற அமைப்பிலிருந்து மாறுபட்ட டிசைன் கொண்ட ஆம்னி, இந்தியாவின் முதல் மல்டி பர்பஸ் வாகனம் ஆகும்.

பழைய படங்களில் கூட ஆள்கடத்தலுக்கு அதிகம் ஆம்னிகளை தான் வில்லன் வகையரா பயன்படுத்தியிருக்கும்.

மாருதி ஆம்னி

கூட்டுக்குடும்பங்களாக இருந்து வந்த முந்தைய தலைமுறை குடும்பத்தினருக்கு ஆம்னி கார் சிறந்த வரப்பிரசாதமாக திகழ்ந்தது. இதன் பின்சீட்டை கழற்றிவிட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் கூட உட்கார்ந்து செல்லலாம்.

காண்டசா

இந்தியாவின் முதல் சொகுசு மற்றும் மஸில் கார் என்ற அந்தஸ்தை பெற்றது காண்டசா கார்.

காண்டசா

1.8 லிட்டர் இசுசு பெட்ரோல் இஞ்சின், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், நீளமான முகப்பு அமைப்பு, ஆகியவை சாலையில் செல்லும் போது இதர்கு ஒரு பணக்கார கார் என்ற அடையாளத்தை கொடுத்தது.

டேவு சீயல்லோ

நவீன கால கார்களுக்கு இருக்கும் சிறப்புகளை தாங்கி வந்த முதல் கார் டேவு நிறுவனத்தின் சீயல்லோ கார்களே.

டேவு சீயல்லோ

1994 முதல் 1999 வரை குறைந்த காலமே விற்பனையில் இருந்த இக்கார் அதிகமான விற்பனை ஆகிவந்தது. டிரைவர் சீட் அட்ஜஸ்மெண்ட் மற்றும் குறைந்த ரேடியஸில் திரும்பும் ஆற்றல் பெற்ற முதல் சீயல்லோ தான்.

டாடா சுமோ

ஆம்னி கார் பெற்றிருந்த மல்டி பர்பஸ் கார் என்ற அந்தஸ்தை, அதனிடமிருந்து தட்டிப்பறித்தது சுமோ கார். 90களில் அறிமுகமான 3 வருடத்திற்குள்ளாக 1 லட்சம் கார்கள் விற்பனையாகியது குறிப்பிடத்தகக்து.

டாடா சுமோ

அதிக உறுப்பினர்களை கொண்ட பெரும் குடும்பங்கள், வாடகை கார் நிறுவனங்கள், ஆகியோர் அதிகம் இக்காரை வாங்கி பயன்படுத்தினர். குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட சுமோ கார்களின் உற்பத்தியை விரைவில் நிறுத்த உள்ளதாக சமீபத்தில் டாடா நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.

ஹூண்டாய் சாண்ட்ரோ

ஹேட்ச்பேக் கார் செக்மெண்டில் முத்திரை பதித்த காராக சாண்ட்ரோ வலம்வந்தது. 1998 - 2014 இதன் காலகட்டமாகும்.

ஹூண்டாய் சாண்ட்ரோ

குறைந்த பராமரிப்பு செலவு, அதிக உட்புற இடவசதி என வருடக்கணக்கில் உழைக்கும் இக்கார் இந்திய சிறு குடும்பங்களுக்கு பிடித்த காராக இருந்து வந்தது.

அதிகம் வாசிக்கப்படும் இதர செய்திகள்...

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, April 15, 2017, 16:50 [IST]
English summary
Read in Tamil about Iconic cars of india or old cars history in india.
Please Wait while comments are loading...

Latest Photos

LIKE US ON FACEBOOK