தாஜ் மஹாலை சுற்றி பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை... காரணம் இதுதான்..!!

தாஜ் மஹாலை சுற்றி பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை... காரணம் இதுதான்..!!

By Azhagar

தாஜ் மஹால் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள இயக்க தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தாஜ் மாஹலை பாதுகாத்து வரும் குழுவின் பரிந்துரையின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மக்களவையில் கூறினார்.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

மேலும் அவர், வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பனால், தாஜ் மஹாலின் பளிங்கு கற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாக அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.

Recommended Video

Kawasaki Ninja Z1000 Launched InTamil - DriveSpark தமிழ்
தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

தாஜ் மஹாலை சுற்றி இயங்கக்கூடிய இலகு ரக வாகனங்கள் பல, இயற்கை எரிவாயு ஆற்றலுக்கு மாற தாஜ் மஹாலை பாதுகாக்கும் குழு தீவிரமாக வலியுறுத்துகிறது.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

அரசின் இந்த முடிவை மீறி தாஜ் மஹாலை சுற்றி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்கள் இயக்கப்பட்டால்,

துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவறை பொறுத்து அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

வாகனப் புகை மற்றும் தூசு காரணமாக தாஜ் மஹாலின் பளிங்கு கற்கள் மஞ்சளாக மாறி வருவது பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனை.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

அதற்கேற்றவாறான நடவடிக்கையை தாமதமாக எடுத்திருந்தாலும், இதை அரசு உற்றுநோக்க வைத்திருப்பது அனைவரும் பாராட்டக்கூடிய ஒன்று தான்.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

எனினும், தாஜ் மஹாலை சுற்றி 500 மீட்டர் தொலைவில் டீசல் மற்றும் பெட்ரோல் ரக வாகனங்களுக்கான தடை என்பதை பெரியளவில் தீர்வை தராது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

தாஜ் மஹாலை காப்பாற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிரடி உத்தரவு!

இருந்தாலும், இதை முதல் முயற்சியாக வைத்து, உலகப் புகழ் பெற்ற கட்டிடமும், உலக அதிசயங்களில் முதன்மை பெற்றுதுமான தாஜ் மஹாலை காக்க இந்திய அரசு இறுதியாக நல்ல தீர்வை எடுக்கவேண்டும் என்பது தாஜ் மஹாலை நேசிக்கும் ஒவ்வொருவது கருத்தாக உள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil- Petrol And Diesel Vehicles Are Now Banned Within 500 Meters From Taj Mahal. Click for Details...
Story first published: Thursday, July 20, 2017, 15:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X