இந்தியாவில் அறிமுகமானது புதிய போர்ஷே பனேமெரா டர்போ கார்

Written By:

இந்தியாவில் தனது நிறுவனத்தையும் விற்பனையையும் விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது புதிய போர்ஷே பனேமெரா டர்போ காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் 4வது போர்ஷே கார் இதுவாகும்.

இந்தியாவில் தனது நிறுவனத்தையும் விற்பனையையும் விரிவுபடுத்தும் நோக்கில் தற்போது புதிய போர்ஷே பனேமெரா டர்போ காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் 4வது போர்ஷே கார் இதுவாகும்.

புதிய போர்ஷே பனேமெரா டர்போ கார், போர்ஷே பனேமெரா சீரீஸின் புதிய உறுப்பினர் ஆகும். போர்ஷேயின் அனைத்து மாடல்களுமே ஸ்டைலிங்கில் சிறந்து விளங்குபவையாக உள்ளன. இந்த காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

புதிய போர்ஷே பனேமெரா டர்போ காரில் 4.0 லிட்டர் வி8 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 543 பிஹச்பி ஆற்றலையும், 770 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும்.

100 கிமீ வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த புதிய பனேமெரா டர்போ கார் மணிக்கு அதிகபட்சமாக 308 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இரண்டாம் தலைமுறை காரான பனேமெரா டர்போ புதிய ஸ்டைலிங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றை கிழித்துச் செல்லும் ஏரோடைனமிக்ஸ் முன்புற வடிவமைப்பு பெற்றுள்ள இதில் முன்புற ஸ்போர்டி எல்ஈடி ஹெட்லைட்டுகள், ரீடிசைன் செய்யப்பட்ட கிரில் அமைப்பு உள்ளது.

இந்த காரின் உட்புறம் முழுவதும் லெதரால் ஆடம்பர வடிவமைப்பு பெற்றுள்ளது. இதில் போர்ஷேயின் விஷேச 12.3 இஞ்ச் கம்யூனிக்கேஷன் மேனேஜ்மெண்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதன் பின்புறத்தில் முன்புற சீட்டுகளில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்பிளே மானிட்டர்கள் கழற்றி மாற்றும் வகையில் அமைக்கப்பட்ள்ளது.

வேகத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களிலும் புதிய போர்ஷே பனேமெரா டர்போ கார் சிறந்து விளங்குகிறது. இதில் டர்ன் அஸிஸ்ட் உடன் கூடிய அடேப்டிவ் லேன் சேஞ்ச் அஸிஸ்ட், லேன் கீப்பிங் அஸிஸ்ட், பார்க் அஸிஸ்ட் மற்றும் சரவுண்ட் வியூ- உடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் கேமிராக்கள் உள்ளன.

இவை கருப்பு, வெள்ளை என்ற இரண்டு ஸ்டேண்டர்டு வண்ணங்கள், 10 மெட்டாலிக் வண்ணாங்களுடன், 4 சிறப்பு வண்ணங்களிலும் புதிய போர்ஷே பனேமெரா டர்போ கார் கிடைக்கிறது.

இந்த புதிய போர்ஷே பனேமெரா டர்போ கார் 1.96 கோடி ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

Story first published: Friday, March 24, 2017, 8:45 [IST]
English summary
Porsche Panamera Turbo Launched In India; Priced At Rs 1.96 Crore
Please Wait while comments are loading...

Latest Photos