மலிவு விலையில் கார்களை அறிமுகப்படுத்த பிஎஸ்ஏ நிறுவனம் திட்டம்

Written By:

கார்கள் மற்றும் பைக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரஞ்ச் நிறுவனமான பிஎஸ்ஏ, பீஜோ, சிட்ரோயன் மற்றும் டிஎஸ் போன்ற துணை பிராண்டுகளையும் கொண்டது. இதில் பீஜோ நிறுவனம் தான் இந்திய கார் வரலாற்றிறில் முத்திரை பதித்த அம்பாஸடர் காரை உற்பத்தி செய்து வந்த ஹிந்துஸ்தான் நிறுவனத்தை கைப்பற்றியது. தற்போது பிஎஸ்ஏ நிறுவனம் இந்திய கார் சந்தையில் நுழைய உள்ளது.

இந்திய மத்திய தர வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ள மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் மாடலான சுவிஃப்ட் காருக்கு போட்டியாக தனது முதல் காரை களமிறக்க உள்ளது இந்நிறுவனம்.

ஸ்மார்ட் கார் சீரிஸ் என அழைக்கப்படும் மாடல் வரிசையில் ஹேட்ச்பேக் மாடலுக்கு அடுத்ததாக காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஒரு மிட்-சைஸ் செடன் கார் ஒன்றினையும் களமிறக்க உள்ளது. இதற்கு தற்போது ஸ்மார்ட் கார் 1, ஸ்மார்ட் கார் 2 மற்றும் ஸ்மார்ட் கார் 3 என பெயரிட்டுள்ளது.

ஸ்மார்ட் சீரிஸ் கார்களில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் அம்சங்களுக்காக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பிஎஸ்ஏ நிறுவனத்தின் சிஎம்பி பிளாட்பார்மில் இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவை வளர்ந்து வரும் சந்தையின் தேவைக்கேற்ற வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் சீரிஸ் ஹேட்ச்பேக் கார் வரும் 2020ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிறகு 2021ஆம் ஆண்டில் காம்பாக்ட் எஸ்யூவி ஸ்மார்ட் காரும் அதற்கு அடுத்த ஆண்டில் நடுத்தர செடன் காரும் அறிமுகமாகும்.

"இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்திய மதிப்பில்" என்ற ரெனால்ட் நிறுவனத்தின் யுக்தியை இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடைப்பிடிக்க உள்ளது பிஎஸ்ஏ நிறுவனம். இதன் மூலம் மலிவான விலைக்கு கார்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் பாரத் ஸ்டேஜ்4 தர மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலில் உள்ளது. வரும் 2020ஆம் ஆண்டுவாக்கில் பாரத் ஸ்டேஜ் 6 விதிமுறைகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி அமலாகும்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணியில் உள்ள மாருதிசுசுகி மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தங்களின் கார் வரிசையை புதிய விதிமுறைபடி மேம்படுத்த வேண்டும், ஆனால் பிஎஸ்ஏ நிறுவனத்திற்கு அது புதிய விதிமுறையாக இருப்பதால் விலையை போட்டி போடும் வகையில் நிர்னயிக்க நல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

புதிய மாருதி ஸ்விப்ட் காரின் படங்களை கேலரியில் காணுங்கள்..

English summary
PSA Group's plan for India includes premium hatchback, compact SUV and premium sedan.
Please Wait while comments are loading...

Latest Photos