தனுஷ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த கார் வாங்கியதன் ரகசியம் இது தாங்க..!

Written By:

தமிழ் சினிமா உலகில் கார் பிரியர்களாக வலம் வரும் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் போர்டு மஸ்டாங் காரை கடந்த ஆண்டு சொந்தமாக்கினர். இதன் ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.

இவர்கள் கார் வாங்கிய ரகசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன்னர் ஃபோர்டு மஸ்டாங் காரின் சுவாரஸ்யமான பிளாஷ்பேக் குறித்து காணலாம்.

பாரம்பரியம் மிக்க ஃபோர்டு மஸ்டாங் கார்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சந்தையில் மட்டுமே கலக்கி வந்தது.

உலகின் பிற ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களிலிருந்து அமெரிக்காவின் மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார்களின் வடிவமைப்பே தனித்துவமாக இருக்கின்றன.

உலகின் மிக வேகமாக வளரும் மார்க்கெட்டாக கருதப்படும் இந்தியாவிலும் இந்த ஃபோர்டு மஸ்டாங் மஸில் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், கடந்த ஜூலை 2016 மாதம் இந்தியாவில் களமிறங்கிவிட்டது.

அதிக திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் மஸ்டாங் கார்கள் இந்திய நட்சத்திர கார் பிரியர்களை ஈர்க்காமல் போய்விடுமா?

ஃபோர்டு மஸ்டாங் கார் Pony Car என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.

உலகின் நம்பர் 1 ஸ்போர்ட்ஸ் கார்..!

கடந்த ஆண்டு உலகின் அதிகம் விற்பனையான ஸ்போர்ட்ஸ் கார் ஃபோட்டு மஸ்டாங் கார் தான் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

‘ஐஹச்எஸ் மார்கிட் டேட்டா' என்ற உலகப் புகழ் பெற்ற ஆட்டோமொபைல் கணக்கீட்டு நிறுவனத்தின் ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது.

ஃபோர்டு மஸ்டாங் மஸில் கார் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள கார்களிலேயே தனித்துவ அடையாளம் கொண்டு விளங்குவதால் தான்இந்த காரை சினிமா பிரபலங்களும் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

இதற்கு நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்தியாவிலேயே இந்த காரை முதலாவதாக வாங்கியவர் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி தான்.

கடந்த ஆண்டில் மட்டும் 1,50,000 மஸ்டாங் கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ளது ஃபோர்டு நிறுவனம்.

மஸ்டாங்கின் பெரிய மார்க்கெட்டாக விளங்கும் அமெரிக்காவுக்கு வெளியில் 45,000 மஸ்டாங் கார்கள் விற்பனையாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

இது கடந்த ஆண்டை காட்டிலும் 101% வளர்ச்சி ஆகும். சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் கனிசமான அளவுக்கு மஸ்டாங் கார்கள் விற்பனையாகியுள்ளது.

140 நாடுகளில்...

மஸ்டாங் கார்களை உலகின் 140 நாடுகளில் ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு முதல் மேலும் 6 நாடுகளில் புதிதாக மஸ்டாங் கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

250 கிமீ வேகம்

ஃபோர்டு மஸ்டாங் கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும்.

6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது. இந்த காரில் பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றும் வசதி உள்ளது.

இந்த காரின் மைலேஜ் பற்றி பேதுவது முறையாக இருக்காது. இருப்பினும், எமது வாசகர்களுடன் இந்த காரின் மைலேஜ் விபரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த கார் லிட்டருக்கு 7.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அப்படியானால், நடைமுறையில் லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ் தரும் என்று நம்பலாம். இது தனுஷ் மற்றும் அனிருத்துக்கு பிரச்னையாக இருக்காது.

இந்த காரில் லைன் லாக் என்ற தொழில்நுட்ப வசதி உள்ளது. டிரிஃப்ட் செய்யும்போது இதன் முன்சக்கரங்களை பிரேக் மூலமாக சுழல விடாமல் தடுத்து, பின்சக்கரங்களை மட்டும் சுழல விடும் வசதி இது.

இந்த வசதியை தனுஷ் மற்றும் அனிருத் பயன்படுத்துவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், டிரிஃப்ட் வித்தை தெரிந்தவர்களை வைத்து சுழல விட்டு, அனுபவிக்கும் வாய்ப்புள்ளது

இந்த காரில் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகள் நிரம்பியுள்ளன.

இருள் வேளைகளில் தானாக ஒளிரக்கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதி, அருகில் வாகனங்களை உணர்ந்து கொண்டு வேகத்தை கூட்டி குறைத்து செல்லும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி.

பாக்கெட்டில் சாவியை வைத்துக் கொண்டு கார் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கான புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, மழை நேரத்தில் தானாக இயங்கும் ஆட்டோமேட்டிக் வைப்பர் என இந்த பட்டியல் நீள்கிறது

ரூ.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்டதாக இந்தியா வந்தது. ஆனால், வரிகள் உட்பட இந்த காரின் விலை ரூ.70 லட்சத்தை தாண்டும் வாய்ப்புள்ளது.

அதேநேரம், அமெரிக்காவில் இந்த கார் ரூ.25 லட்சம் என்ற இந்திய மதிப்பில்தான் விற்பனையாகிறது.

ஃபோர்டு மஸ்டாங்குக்கு அடுத்த நிலையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக பிஎம்டபிள்யூ 4 சீரீஸ், நிசான் 370 இசட், ஃபோர்சே 900 மற்றும் மஸ்டா எம்எக்ஸ்-5 மாடல்கள் உள்ளன.

தற்போது 4ஆம் தலைமுறை மஸ்டாங் கார்கள் விற்பனையில் உள்ளன. விரைவிலேயே அடுத்த தலைமுறை மஸ்டாங் கார் அறிமுகமாக உள்ளது.

இதில் வி6 எஞ்சின் வி8 ஆக மேம்படுத்தப்பட்டு , 10 வேக டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஷேவாக்குக்கு பிறகு முச்சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்த கருண் நாயர் கூட ஃபோர்டு மஸ்டாங் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about why actor dhanush, anirudh bought ford mustang sports car? reasons revealed.
Please Wait while comments are loading...

Latest Photos